நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா?
பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் பிரபல சேனலுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தன் அப்பா இறந்த அன்று நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளமை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அனிதா சம்பத்
அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளராக தமிழ்நாடு மக்களிடம் அறிமுகமான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்குபற்றிய பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யயமானார்.
இவர் சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தன் அப்பா இறந்த சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிடுகையில் “நான் தான் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டமில்லாத ஒரு மகள் என அடிக்கடி எழுதுவேன். அப்பா இறந்த நேரத்தில் தான் இப்படி எழுதினேன். யார் என்ன சொன்னாலும், பெற்றோர்களின் இழப்புக்கு யாராலும் ஆறுதல் சொல்லவே முடியாது.
நான் பிக்பாஸ் வீட்டில் 85 நாட்கள் இருந்தேன். இந்த சமயம் 18 பேர் பிக்பாஸ் வீடடில் இருந்தார்கள். ஆனால் 4,5 பேர் மட்டும் தான் அப்பா இறப்பிற்கு வந்தார்கள். நான் என்னுடன் இருந்தவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் கட்டாயம் சென்றிருப்பேன்.
நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு உள்ளே இருந்தவர்களிடம் யார் யார் வெளிநாடு போயிருக்கீங்க அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டுக்கொண்டே இருப்பேன் காரணம் அப்பாவை உலகம் முழுவதும் சுற்றுலா கூட்டிட்டு போக வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிச்சிட்டு வந்த மறுநாள் அப்பா இறந்ததாக தம்பி போனில் குறிப்பிட்டான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு கேக் வெட்டி கணவர் பிரபா மற்றும் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அந்த வீடியோவில் கூட நான் அப்பா எங்கே என்று தான் கேட்டிருப்பேன்.
அவர் நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடக்கூடாது என சொல்லி ஷீரடி சென்றிருப்பதாக சொன்னார்கள்.
அது டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெற்றது. மறுநாள் 29ஆம் திகதி காலை 8 மணிக்கு போன் வருகிறது. அம்மாவுக்கு அப்போது குடலிறக்கம் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது.
அவர் போனை எடுத்து பேசிக்கொண்டே ஆபரேஷன் பண்ண இடத்தில் அடித்துக் கொண்டே அழுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் தம்பியிடம் நான் பேசினேன். அவன் விஷயத்தை சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நம்பவே முடியவில்லை.
ஆனால் அவர் ஷீரடி போய் விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஆந்திரா அருகில் தான் அந்த நிகழ்வு நடந்துள்ளது. அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வந்த காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை.
அப்பா பத்திரிக்கை துறையில் பிரபலமானவர் என்பதால் அவர் இறந்தது பற்றி தகவல் அனுப்பினேன். நான் பப்ளிசிட்டிக்காக பண்ணியதாக புதிய பிரச்சினை கிளம்பியது. பல்வேறு எதிர்மறை விமர்சணங்களுக்கு ஆளாகி ஒரு பெண்ணாக மிகவும் உடைந்து போய்விட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |