2025 ராசிபலன்: லட்சுமி தேவியின் ஆசியால் பண வெள்ளத்தில் மூழ்க போகும் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே புதிய ஆண்டு ஆரம்பிக்க போகின்றது என்றால், அனைக்கும் ராசிபலன்கள் எவ்வாறு இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள அதிக ஆர்வம் இருக்கும்.
குறிப்பாக அடுத்த ஆண்டில் நிதி நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வதில் முக்கியமாக கவனம் செலுத்துவார்கள்.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்புகளின் பிரகாரம் செல்வ செழிப்பின் கடவுளாக திகழும் லட்சுமி தேவியின் ஆசியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சியடையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகின்றது. இந்த ஆண்டு பல்வேறு வழிகளிலும் நன்மை கொடுக்கும் சிறப்பான ஆண்டாக அமையப்போகின்றது.
குறிப்பாக இந்த ஆண்டில் லட்சுமி தேவியின் முழுமையான ஆசீர்வாதம் இவர்களுக்கு கிடைக்கும். கடந்த ஆண்டுகளை விட பலமடங்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அல்லது பெரிய முதலீடுகளில் இருந்து அதிக லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. குடும்ப வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு தீர்வு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டில் பண ரீதியில் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றம் அடையப்போகின்றார்கள்.
இவர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைப்பதால், 2025 ஆம் ஆண்டில் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
இதுவரையில் இருந்து வந்த கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும். பலவழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்டுகின்றது.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். மொத்தத்தில் 2025 நிதி நிலையில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பல்வேறு சாதக பலன்கள் கிடைக்கக்கூடிய ஆண்டாக அமையும்.
முக்கியமான நிதி விடயத்தில் அசுர வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அமோகமான ஆண்டாக இருக்கும்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இதுவரையில் இருந்து வந்த இடர்கள் நீங்கும். கணவன் மனைவியிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
புதிய தொழில் முயற்சிகள் மற்றும் முதலீகளின் மூலம் பல்வேறு வழிகளில் இருந்தும் வருமானம் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |