குளியலறையில் மாரடைப்பு அபாயம் அதிகரிப்பது ஏன்? மருத்துவ விளக்கம்
பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் பிரதான இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.
மாரடைப்பு தற்காலத்தில் மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான விளக்கம் இன்னுமே பெரும்பாலானவர்கள் மத்தியில் இருப்பதில்லை.
தற்காலத்தில் அதிகரித்த வேலைபளு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதிய உடற்பயிற்சியின்மை, ஒரு இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது போன்ற பிரச்சினைகள் காரணமாக மாரடைப்பு ஏற்படும் விதம் அதிகரித்து வருகின்றது.
குறிப்பான பெரும்பாலானவர்களுக்கு குளியவறையில் இருக்கும் போது தான் மாரமைப்பு ஏற்படுகின்றது. இது தொடர்பான மருத்துவ விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மலம் கழிக்கும் போது மாரடைப்பு
மருத்துவர்களின் கருத்துப்படி பொதுவாகவே உடலில் அழுத்தம் கொடுக்கும் போது இதயத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கின்றது.
அந்தவகையில் மலம் கழிக்கும் பட்சத்தில் கழிவுகளை வெளியேற்ற நாம் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதிலும் மலச்சிகல் இருப்பவர்கள் அதிக அழுத்தத்தை பிரயோகித்தே மலத்தை வெளியேற்றுகின்றார்கள்.
இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கழிவறையில் திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு இதயத்தில் ஏற்படுகின்ற கூடுதல் அழுத்தம் தான் காரணைமாக இருக்கின்றது.
குளிக்கும் போது மாரடைப்பு
பொதுவாக உடல் வெப்பநிலை இதய துடிப்பில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. குளிக்கும் போதும் இது நிகழ்கின்றது.
அதிக சூடான அல்லது குளிர்ச்சியான நீரில் குளிக்கும் போது உடனடியாக இதய துடிப்பின் வேகம் அதிகரிக்க கூடும். அதனால் அதய தமனிகள் மற்றும் நுண் குழாய்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு இதய கோளாறு உள்ளவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகரிக்கின்றது.
அதனால் இதயம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் குளியலறை மற்றும் கழிப்பறையில் இருக்கும் போது அதிக அவதானமாக இருக்க வேண்டும்.
குளியல் அறைக்குள் செல்லும் போது தாமதமானால் பார்க்கும்படி வீட்டில் உள்ளவர்களிடம் செல்லிவிட்டு செல்ல வேண்டும்.
நெஞ்சு வலி, திடீர் மூச்சுத்திணறல்,வாந்தி மூச்சுவிடுவதில், சிரமம் , மயக்கம் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக குளியல் அறைக்குள் இருந்து வெளிவந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இதய கோளாறு இருப்பவர்கள் குளியல் அறை அல்லது கழிப்பறைக்கு செல்லும் போது போனை எடுத்து செல்வது உயிராபத்தை தடுக்க பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |