மனைவிக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?
பொதுவாகவே உலகில் அனைவரும் தம்முடன் இருப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
அதிலும் பெண்கள் தங்களின் எதிர்கால கணவன் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உடையவர்களாக இருக்கின்றனர்.
சிறு வயதில் இருந்து வளர்ந்த குடும்பத்தை பிரிந்து இன்னொரு வீட்டிற்கு வாழப்போகும் பெண்கள் மனதில் கணவன் குறித்து ஏராளமான ஆசைகள் இருக்கும்.
மனைவிக்காக எதையும் செய்யும் கணவன் கிடைத்துவிட்டால் அந்த பெண்ணை விட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மனைவிக்கான எந்த விடயத்தையும் விட்டுக்கொடுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
உறுதியான மனம் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், தங்கள் துணையிடம் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்கள். பரந்த இதயத்துடன், தனது அன்பை துணைக்கு வெளிப்படுத்துவதில் வல்லவர்கள்.
தங்கள் அன்பை சொல்லில் காட்டுவதை விட செயலில் காட்டுவதையே இவர்கள் விரும்புவார்கள். தனது மனைவியின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு அசைக்க முடியாத ஆதரவையும் பாதுகாப்பான புகலிடத்தையும் வழங்குவார்கள்.
கடகம்
கடக ராசிக்கார்களின் காதலும் எப்போதும் பிரகாசமாக இருக்கும். உள்ளுணர்வு திறன் இவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் தங்கள் மனைவியின் தேவைகளை புரிந்துகொள்வதில் திறமையானவர்களாக இருப்பார்கள்.
இதயப்பூர்வமான செயல்கள் தொடங்கி வீட்டை பாதுகாத்து பராமரிப்பது வரை இவர்களின் அன்பு எல்லையற்றதாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் கடக ராசிக்கார்கள் ஒவ்வொரு செயலையுமே அன்புடனும் அக்கறையுடனும் செய்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் அரவணைப்பையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.
மிகவும் உற்சாகமானவர்களாக இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் உற்சாகம் மற்றும் பிரம்மாண்ட பரிசுகள் மூலம் தங்கள் மனைவியை அசர வைப்பார்கள், தங்கள் மனைவிக்கு மறக்க முடியாத தருணங்களை உருவாக்க எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |