வாழும் போதே நரக வேதனையை அனுபவிக்கும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள், நிதி நிலை, காதல் மற்றும் திருமண வாழ்ககையுடன் மிக நெருங்கிய வகையில் தொடர்புபட்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் விடயத்தில் அவ்வளவாக அதிர்ஷ்டமற்றவர்களாம். இவர்கள் எவ்வளவு உண்மையாக காதலித்தாலும் இறுதியில் ஏமாற்றத்தை சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.
அப்படி காதலால் நகர வேதனையை அனுபவிக்கும் துரதிஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறப்பெடுத்த நபர்கள் தங்கள் ஆழ்ந்த உணர்திறன் மற்றும் உணர்ச்சி இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
அவர்கள் உணர்ச்சி ரீதியான மற்றவர்களின் துணையின்றி வாழ முடியாதவர்களாக இருப்பார்கள். அதனால் காதல் விடயங்களில் எப்போதும் ஒரு பாதுகாப்பற்ற உண்ர்விலே இருப்பார்கள்.
இவர்கள் எந்தளவுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் ஒருவரை காதலிக்கின்றார்களோ அந்தளவுக்கு துன்பத்தையும் அனுபவிக்க நேரிடும். இவரின் காதல் வாழ்கை பொரும்பாலும் சோகம் நிறைந்ததாகவே அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அமைதியற்ற இயல்புடையவர்களாகவும் சாகச குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.அவர்களின் இந்த குணம் காரணமாக காதல் வாழ்வில் துணையை மகிழ்விக்க முடியாத நிலை ஏற்படும்.
மேலும் ஆய்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஆழ்ந்த விருப்பத்தை கொண்ட இவர்கள் தங்களின் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இது நிலையான உறவுகளைப் பராமரிப்பதில் சவால்களுக்கு வழிவகுக்கும்.
புதிய அனுபவங்களில் இவர்களின் தேடல் ஆழமான உணர்ச்சி தொடர்புகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதனால் இவர்களின் காதல் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கலாம்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
காதலுடன் வரும் உணர்ச்சி ரீதியான பாதிப்பை முழுமையாக ஒப்புக்கொள்வதும் ஏற்றுக்கொள்வதும் கும்ப ராசிக்காரர்களுக்கு சவாலாக இருக்கலாம்.
காரணம் இவர்கள் தாங்கள் சொல்வதை மட்டுமே துணை கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதனால் இவர்களின் காதல் வாழ்வில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, காதலை நரகமாக மாற்றிவிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |