சாகும் வரை ஒருவர் தான்.. வைராக்கியத்துடன் வாழும் ராசிகள்- நீங்களும் அப்படியா?
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் ஒருவரை வாழ்க்கையில் நினைத்து விட்டால், அந்த முடிவில் எப்போதும் தெளிவாக இருப்பார்கள்.
ஏனெனின் திருமண வாழ்க்கை என்பது தீரா பந்தம் என பலரும் கூறுவார்கள். அப்படியான உறவில் எப்படி அம்மா, அப்பா ஒருவராக இருக்க முடியாமோ அதே போன்று திருமணமான பின்னரும் ஒரே துணையுடன் அவர்களின் வாழ்க்கை முழுவதையும் வாழ வேண்டும் என நினைப்பார்கள்.
காதல் வாழ்க்கையில் இருக்கும் இளைஞர்கள் இதை மறந்து விட்டு, நேரத்திற்கு ஏற்றால் போன்று காதலர்களையும் மாற்றிக் கொள்கிறார்கள்.
தற்போது இந்த விடயம் சர்வ சாதாரணமாக மாறி விட்டது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே காதல் வாழ்க்கையில் இருக்கும் அழகு தெரியும். இவர்கள் மற்றவர்கள் போன்று அல்லாமல் அன்பை ஒரு உயிர்ப்பந்தமாக கருதுவார்கள்.
துணைக்கு எந்த நிலை வந்தாலும், அவர்களை கைவிடாமல் பிடித்து கொள்வார்கள். அவர்களே உண்மையான துணையாகவும், நண்பர்களாகவும் இருக்க முடியும்.
அந்த வகையில், காதலிப்பது முதல் இறக்கும் வரை ஒரே துணையுடன் வாழும் ராசிக்காரர்கள் பிறந்த ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஒரே துணையுடன் வாழும் ராசிகள்
ரிஷபம் (Taurus) | ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பொறுமையானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் பொறுமை துணை மீதுள்ள காதலை அதிகப்படுத்தும்.இவர்கள் ஒரு உறவினுள் நுழைந்துவிட்டால் புயலோ, வெயிலோ வந்தாலும் துணைக்கு சாதகமாக பேசுவார்கள். வாழ்நாள் முழுவதும் காதலிப்பதை ஒரு வேலையாக செய்வார்கள். கணவன்- மனைவியாக பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு பொறாமையாக இருக்கும். எப்போதும் மற்றவர்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். இவர்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். |
கடகம் (Cancer) | கடக ராசியில் பிறந்தவர்கள் பாசமிகு காவலர்களாக இருப்பார்கள். போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அன்பை காட்டுவார்கள். சந்திரன் இவர்களின் அதிபதியாக இருப்பதால் மென்மையானவர்களாக இருப்பார்கள். துணையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு குடும்பம் கொண்டு செல்வார்கள். இவர்களுக்குள் இலகுவில் சண்டைகள் வராது. அப்படி வராத காரணத்தினால் இவர்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். |
மீனம் (Pisces) | மீன ராசியில் பிறந்தவர்கள் கனவு காதலர்களாக இருப்பார்கள். துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றால் போன்று நடந்து கொள்வார்கள். காதலில் மிகுந்த கற்பனை பாவனையுடன் இருப்பவர்கள். இவர்கள் நண்பர்களாக இருந்து, அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். துணை இல்லாவிட்டால் தனியாக இருப்பார்களே தவிர வேறு யாரையும் காதலிக்கமாட்டார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).