கொலஸ்ட்ரோல் அளவை கம்மியாக்கும் ஜுஸ்- யாரெல்லாம் குடிக்கலாம்?
பொதுவாக நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒருவிதமான வேலையை செய்கிறது.
அதில் முக்கிய பொருள் தான் கொலஸ்ட்ரோல், இதனை கல்லீரல் தினமும் உற்பத்தி செய்கிறது.
நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் மூலம் இந்த கொலஸ்ட்ரோல் உருவாக்கம் பெறுகிறது. தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக சிலருக்கு கொலஸ்ட்ரோலின் அளவு அதிகமாகி விடும். இதனால் அவர்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான இதய நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
கொலஸ்ட்ரால் அதிகமாகி விட்டால் அதனை குறைக்க மருந்து வில்லைகள் வழங்கப்படும், அத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம்.
சிவப்பு நிற பானங்கள் அடிக்கடி குடிப்பவர்களுக்கு கொலஸ்ட்ரோல் அதிகரிப்பு பிரச்சினை வராது. ஏனெனின் இந்த பானங்களில் இருக்கும் ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
அந்த வகையில் மாரடைப்பு வரக்கூடாது என நினைப்பவர்கள் அவசியம் குடிக்க வேண்டிய பானங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ட் ரோல் அளவு கம்மியாக்கும் பானங்கள்
1. திராட்சை பானம்
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த சிவப்பு திராட்சையை வைத்து பானம் செய்யலாம். இதனை குடிக்கும் ஒருவரின் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். அதே சமயம் நல்ல கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழங்களில் திராட்சை முக்கிய இடத்தை பிடிக்கிறது.
2. பீட்ரூட் பானம்
வழக்கமாக நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கு வீட்டிலுள்ள காய்கறிகளை வைத்து வைத்தியம் செய்யலாம். அப்படியாயின், கொலஸ்ட்ரோல் பிரச்சினையுள்ளவர்கள் பீட்ரூட்டில் பானம் செய்து குடிக்கலாம். இதிலுள்ள நைட்ரேட்டுகள் இரத்த குழாய்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனால் கொலஸ்ட்ரால் அளவு சீராக மாறும்.
3. செம்பருத்தி பூ போட்ட டீ
செம்பருத்தி ஒரு மலர் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த பூ போட்ட டீ குடித்தால் இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும். இதனை அடிக்கடி குடிக்கும் இளைஞர்களுக்கு கெட்ட மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்றன குறைந்து கல்லீரல் செயல்பாட்டு திறன் அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |