Neeya Naana: தகப்பனின் கண்முன்னே உயிரிழந்த மகன்... பேரதிர்ச்சியில் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் தெருநாய்கள் அகற்றப்பட வேண்டும் இதனை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்நிகழ்ச்சியினை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு இருதரப்பினராக பிரிந்து விவாதிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகி வருகின்றது.
இந்த வாரம் தெருநாய்கள் அகற்றப்பட வேண்டும் இதனை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெருநாய்களால் இன்று பல பிரச்சனைகளை பலரும் சந்தித்து வரும் காணொளிகள் இணையத்தில் பல வெளியாகியுள்ளது.
குழந்தைகளை கடித்து குதறுவது, இளைஞர் ஒருவர் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கப்பட்டு போராடியது, இதே போன்று பெண் ஒருவரும் போராடியது என காணொளிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Ethirneechal: போனை தர்றேன் தர்றேன் என கதறிய அறிவுக்கரசி.... மாஸ் காட்டிய பெண்களுக்கு இப்படியொரு ஏமாற்றமா?
இதனால் தெரு நாய்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது. இதனை சிலர் ஆதரித்தாலும் பலர் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர் தனது குழந்தையை கண்முன்னே பறிகொடுத்ததை கூறியுள்ளார். இதனைக் கேட்ட கோபிநாத் கடும் அதிர்ச்சியில் காணப்பட்டார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |