இந்த ராசியினரிடம் வம்பு வச்சிக்காதீங்க... வாழும் போதே நரகத்தை காட்டிவிடுவார்கள்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் நண்பர்களாக எந்தளவுக்கு அன்பானவர்களாக இருக்கின்றார்களோ, அதை விட பல மடங்கு அபாயகரமான எதிரியாக இருப்பார்களாம்.
அப்படி தங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு வாழும் போதே நரகத்தை காட்டிவிடும் மோசமான எதிரிகள் எந்த ராசியினர் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ரசியக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் ஆபத்தான எதிரிகள் பட்டியலிலும் முதல் இடம் வகிக்கின்றார்கள்.
இந்த ராசிக்காரர்கள் போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால், இயல்பாகவே சண்டையிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை பகைப்பவர்களுக்கு மிகவும் மோசமான எதிரியாக மாறிவிடுவார்கள்.
இவர்கள் மனதளவில் மிகவும் தீவிரமானவர்கள் மற்றும் மனஉறுதி கொண்டவர்கள். அவர்கள் தங்கள் அறிவு மற்றும் தகுதியை மீறி, வலிமையான போட்டியாளரைக் கூட தோற்கடிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் கிரகங்களின் தளபதியான செவ்வாயால் ஆளப்படுவதானால், இவர்களிடம் இயல்பிலேயே போர் குணம் இருக்கும்.
இவர்கள் வெளித்தோற்றத்திற்கு பார்ப்பதற்கு அமைதியாகவும், நிதானமாகவும் தோன்றலாம், ஆனால் அவர்களின் மனதில் தீவிரமானவர்களாக இருப்பார்கள்.
மர்மமான இயல்புக்கு பெயர் பெற்ற இவர்கள் ஒருவருக்கு எதிரியா மாறிவிட்டால் இவர்களின் வாழ்க்கைக்கு முடிவுகட்டாமல் ஓயவே மாட்டார்கள். இவர்களால் நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கவே முடியாது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அனைத்து ராசிக்காரர்களையும் விட மிகவும் சிக்கலான குணம் கொண்டவர்களாகவும் மோசமாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆக்ரோஷமான மனதைக் கொண்டுள்ளனர். இவர்களிடம் சிறிதாக வாக்குவாதம் செய்தால் கூட அவர்கள் தங்களின் மோசமாக முகத்தை வெளிக்காட்டுவார்கள்.
இவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்வதிலும் சிறந்தவர்கள். இவர்களை பகைத்துக்கொள்வது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |