பெருங்காயத்திலும் போலியா! ஒரிஜினலை எவ்வாறு கண்டுப்பிடிப்பது?
பொதுவாக இந்திய உணவுகளில் பெருங்காயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இது நமது முன்னோர்களால் தொன்று தொட்டு பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. இறைச்சி உணவை சமைக்கும்போதும்,வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் பெருங்காயத்தை சேர்ப்பது அவசியம்.
இது அனைத்து விதமான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் வயிறு சம்பந்தப்பட்ட அசௌகரியங்களுக்கும் தீர்வு கொடுக்கும்.
தற்காலத்தில் பல்வேறு நிறுவனங்களும் பெருங்காயம் மற்றும் பெருங்காய தூளை விற்பனை செய்வதனால் எது ஒரிஜினல் எது போலி என்பதில் குழப்பம் நிழவுகின்றது.
ஒரிஜினல் பெருங்காயத்தை வீட்டிலேயே எளிமையான சில வழிமுறைகளை மூலம் எவ்வாறு கண்டறிவது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தண்ணீரில் சோதனை
பெருங்காயத்தை தண்ணீரில் போட்டு அது ஒரிஜினல் பெருங்காயமா அல்லது போலியா என்பதை எளிதில் கண்டுப்பிடித்துவிடலாம்.
தூளாக இருந்தாலும் சரி , கட்டியாக இருந்தாலும் சரி பெருங்காயத்தை தண்ணீரில் கலந்த சில நொடிகளிலேயே அது பால் நிறமாக மாற வேண்டும்.
அவ்வாறு மாறினால் அது ஒரிஜினல் பெருங்காயம் என்பது உறுதி. ஆனால் அழுக்கு படிந்தது போல் மற்றும் நீர்த்துப்போவது போல் இருந்தால் அது போலி அல்லது கலப்படம் செய்யப்பட்டதாக இருக்ககூடும்.
சுடுதண்ணீ சோதனை
பெருங்காயத்தை சுடு தண்ணீரில் கலந்த உடனேயே அது கரைந்துவிடும். அவ்வாறு கரைந்தால் அது ஒரிஜினல். மாறாக கரையாத துகள்கள் எஞ்சியிருந்தால் அது போலி பெருங்காயம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
வெப்ப சோதனை
கட்டி பெருங்காயம் அல்லது தூள் பெருங்காயத்தை நெருப்பில் காட்டியவுடன் பற்றிக்கொண்டு எரியத் ஆரம்பித்துவிடும் அவ்வாறு எரிந்தால் அது ஒரிஜினல் என்று அர்த்தம். மாறாக அது எரியாமல் இருந்தால் அதில் கலப்படம் இருப்பது உறுதி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |