இந்த ராசியினருக்கு ஆட்சி பொறுப்பு தேடி வருமாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தங்களின் பட்டம், பதவி மீதான ஆசை இருப்பது இயல்பான விடயம் தான். உயர் பதிவியை பெற வேண்டும் என்று வாழ்ககை முழுவதும் போராடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களை உயர் பதவிகளும், உயர் அந்தஸ்தும் தேடி வருமாம். இவர்கள் ஆசைப்படாத போதும் இவர்கள் வாழ்வில் ராஜாவாகத்தான் இருப்பார்கள்.

அப்படி பிறப்பிலேயே சமூகத்தில் உயர்ந்த பதவியில் அமரக்கூடிய ராஜ யோகம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

அனைத்து கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் இயல்பாகவே சிறந்த தலைமைத்துவ குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் கம்பீரமான தோற்றம், அறிவாற்றல் என்பன இவர்களுக்கு நிச்சயம் உயர்ந்த பதவியில் அமரும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இந்த ராசியினர் இயற்கையாகவே பிரகாசிக்கக் கூடியவர்களாகவும், எளிதில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நேர்த்தி, வசீகரம் மற்றும் ராஜதந்திர குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் அனைவரின் கவனமும் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்
அழகு மற்றும் நல்லிணக்கத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இயல்பாகவே செல்வ செழிப்பையும் உயர் பதவிகளுயும் ஈர்க்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் வாழ்க்கை முழுவதும் மற்றவர்களால் மதிக்கப்படும் ஒரு அந்தஸ்தில் இருப்பார்கள்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு பிறப்பிலேயே அரச குணங்கள் நிச்சயம் இருக்கும். இவர்கள் தங்களின் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத குணத்துக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
சனிபகவானால் ஆளப்படும் இவர்களின் செயல்களில் எப்போதும் நீதியும், நேர்மையும் இருப்பதால், மற்றவர்களை காக்கும் பதிவி இவர்கள் விரும்பாத போதும் இவர்களை தேடி வரும்.
இவர்கள் தனித்துவ குணங்கள் காரணமாக அவர்கள் நிச்சயம் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் பொறுப்பு மிக்க பதவிகளில் இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |