இவங்க கிட்ட ஜாக்கிரதையா இருங்க... ரொம்பவே ஆபத்தான ராசிகளாம்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல், விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் முக்கிய நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் சுய நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஆபத்தான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி எதிர்பாராத வகையில் மற்றவர்களை பற்றிய அக்கறையின்றி முடிவெடுக்கும் ஆபத்தான ராசிகளாக அடையாளப்படுத்தப்படும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ரகசியம் காப்பதிலும் மர்மமான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை மிகவும் நெருங்கியவர்களிடம் கூட பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
அவர்கள் யாரையாவது தங்களின் எதிரி என முடிவு செய்துவிட்டார்கள் என்றால், கொஞ்சமும் தயங்காது விஷமுள்ள உயிரினத்தைக் போல் தாக்குவரார்கள். இவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்வது மிகவும் ஆகத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த ராசிக்காரர்கள் தங்களின் நண்பர்களுக்கு எந்தளவுக்கு துணையாக நிற்பார்களே அதை விட பல மடங்கு அவர்களின் எதிரிகளுக்க முழுநேர எதிரியாக இருப்பார்கள்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுவதால், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களை சிம்மாசனத்தில் அமர்த்திக்கொள்ள யாரை வேண்டுமானாலும் வீழ்த்துவதற்கு தயாராக இருப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் யாரையாவது அழிக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு வாழும் போதே நரகத்தை காட்டிவிடுவார்கள். இவர்களிடம் வம்பு வைத்துக்கொள்வது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களை வீழ்த்துவதற்காக தீய திட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கும் போது தங்கள் விமர்சன பகுப்பாய்வு திறன்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
அவர்கள் உண்மையிலேயே இனிமையானவர்கள் மற்றும் நல்லவர்கள் என்று மற்றவர்களை நம்பவைத்து தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
ஆனால் காரியம் முடித்த பின்னர் அவர்களை பற்றி சற்றும் சிற்திக்க மாட்டார்கள். இவர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதும் சரி பகையை வளர்த்துக்கொள்ளுவதும் சரி ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |