உச்சபட்ச நுண்ணறிவுடன் மேதைகளாகவே பிறப்பெடுத்த 3 ராசியினர்... உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதி புத்திசாலித்தனம் கொண்டு மேதைகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
புதுமை மற்றும் புத்திகூர்மையின் கிரகமான யுரேனஸால் ஆளப்படும் கும்பம், ராசியின் சான்றளிக்கப்பட்ட மேதைகளாகவே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் ஒரு வாரத்தில் கற்றுக்கொள்ளும் விடயத்தை இவர்கள் வெறும் மூன்று தினங்களில் கற்றுக்கொள்ளும் அளவுக்கு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்ளுக்கு நினைவாற்றளும் மற்றவர்களை விட மிக அதிகமாக இருக்கும்.எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விடயங்களைகூட எளிதாக கணித்து சரியான முடிவெடுக்கும் திறனை இவர்கள் நிச்சயம் பெற்றிருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தர்க்கரீதியானவர்கள், அதிக பகுப்பாய்வு திறன் கொண்டவர்கள் மற்றும் விவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எந்த விடயத்திலும் முழுமையையும், நேர்த்தியையும் விரும்ப கூடிய இவர்களை ஆளும் கிரகமான புதன், கூர்மையான பகுத்தறிவுத் திறன்களை இவர்களுக்கு கொடுக்கின்றார்.
மற்றவர்கள் தவறவிடக்கூடிய வாய்ப்புகளையும் சரியான பயன்படுத்திக்கொண்டு, வெற்றியடைய கூடிய வாய்ப்பு இந்த ராசியினருக்கு அதிகமாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் புத்திக்கூர்மையையும், ஒழுக்கத்தையும் இணைத்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் பார்ப்பதற்கு விளையாட்டு தனமான இருந்தாலும், இலக்குகளை அடைய பல ஆண்டுகள் எடுத்தாலும், நிச்சயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் வெற்றியடைவார்கள்.
சனியின் ஆட்சியில், இந்த ராசிக்காரர்கள் தலைமைத்துவத்திலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் சிறந்து விளங்குவார்கள். இவர்களின் கல்வியறிவு அபரிமிதமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |