இரும்பு இதயத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கமே தனித்துவமான ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்கள் இருக்கும் அதில் அவர்களின் பிறப்பு ராசியானது பாரியளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவைகையில் குறிப்பிட்ட சில ராசியினர், பிறப்பிலேயே உணர்வுகளுக்கு கட்டுப்படாத வகையில் இரும்பு போன்ற இதயம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவர்களை மன ரீதியாக பாதிப்படைய செய்வது யாராலும் முடியாது. அப்படி எந்த நிலையிலும் மனமுடையாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் மனஉறுதி, சுயக்கட்டுப்பாடு மற்றும் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களின் எண்ணங்கள் மற்றும் மனவலிமை வியக்கவைக்கும் வகையில் இருக்கும்.
குறிப்பாக இலக்குகளை அடைவது என்று வரும்போது அவர்கள் லாஜிக் மற்றும் எதார்த்த செயல்முறைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இவர்கள் கடினமான சூழ்நிலைகளிலும் தங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனம் சொல்வதை கேட்காமல் அறிவாற்றலை நம்பி மூளை சொல்வதை பின்பற்றுகின்றார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான நபர்களாக இருப்பார்கள் இவர்கள் மிகவும் ஆழமான உணர்வுகளைக் கொண்டுடிருந்தாலும், தங்களின் உணர்ச்சிகளை மறைத்தே வைத்திருப்பார்கள்.
அவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்களாக இருபார்கள் இவர்கள் தங்களின் பலவீனங்களை வெளிக்காட்டுவது மிக மிக அரிது.
மிகவும் பிடிவாதமான குணம் கொண்ட இவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது தங்கள் உணர்ச்சிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள். இவர்களின் இதயம் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் அனைத்தையும் விட சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கடினமான சூழ்நிலைகளிலும் லாஜிக்காக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். சிந்திக்கும்போது பெரும்பாலும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
இவர்களின் மனதை பலவீனப்படுத்தி இவர்களை தோல்வியடைய செய்வது பெரும் சவாலான விடயமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |