பணத்தில் புரள்வதற்கே பிறவி எடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பணத்தின் மிது ஆசை இருக்கும். அனைவருமே சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக தான் போராடுகின்றார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களை பணமே விரும்புமாம். இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
அப்படி கோடிகளில் புரள்வதற்கே, ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் விரும்புவதைச் சேமிக்க முனைகிறார்கள், அது அதிக விலை கொண்டதாக இருந்தாலும் கூட. அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள்.
எவ்வளவு காலம் எடுத்தாலும், செழிப்புக்கான அடித்தளத்தை உருவாக்க அவர்கள் தொடர்ந்து முயற்சிப்பார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை நோக்கி பணத்தை காந்தம் போல் ஈர்க்கின்றது.
உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் வாழ்வின் இறுதி வரையில் செல்வ செழிப்புடன் வாழும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்கள், உறுதியானவர்கள் மற்றும் சமயோசிதமானவர்கள். இவர்களுக்கு பணத்தை இரட்டிப்பாக்கும் கலை நன்றாகவே தெரிந்திருக்கும்.
இந்த அச்சமற்ற ராசிக்காரர்கள், தங்களின் இலக்குகளில் அதிக கவனத்தை கொண்டிருப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்டம் குறைந்த முயற்ச்சியிலேயே இவர்களை பொருளாதாரத்தில் உச்சத்துக்கு கொண்டு செல்லும்.
அவர்களின் கூர்மையான உள்ளுணர்வு, மற்றவர்கள் தவறவிடக்கூடிய வாய்ப்புகளைப் பார்க்க அவர்களுக்கு உதவுகிறது.இவர்கள் இருக்கும் இடம் செல்வத்ததால் நிறைந்திருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வணிகம், நிதி மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள். இருப்பினும், கடின உழைப்பு பலனளிக்கும் எந்தத் துறையிலும் அவர்கள் பெரும்பாலும் சிறந்து விளங்குவார்கள்.
இவர்களின் அதிர்ஷ்டம் இவர்களுக்கு துணையாக இருக்கும். ஆனால் இவர்கள் எப்போதும் உழைப்பை நம்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் ஒருபோதும் பணத்துக்கு கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |