எப்போதும் சரியாக முடிவெடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, நிதி நிலை, திருமண வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி கடினமான சூழ்நிலையிலும் நிதானமான சிந்தித்து சரியாக முடிவெடுக்கும் சக்தியை இயல்பாகவே பெற்றுள்ள ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அனைத்து விஷயத்தையும் தீர ஆலோசித்து முடிவெடுப்பவர்கள். இவர்கள் எதிலும் முழுமையும் நேர்த்தியும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
அவர்களின் பகுப்பாய்வு திறனால் பெரும்பாலும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். இவர்கள் சூழ்நிலைகளுக்கு இயைந்து வாழும் தன்மை கொண்டவர்களாகவும், போராட்டங்களுக்கு மத்தியிலும் சரியாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்குத் தேவையான உண்மைகளை மற்றவர்களிடமிருந்து கரப்பதில் கில்லாடிகள். அவர்களின் துல்லியமான மதிப்பீடுகள் மற்றும் சரியான தீர்ப்புகள் இவர்களின் சீரான முடிவுகளுக்கு காரணமாக இருக்கின்றது.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கம் மற்றும் எதார்த்த அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் கடினமான சூழ்நிலைகளிலும் கூட இவர்களை சரியாக சிந்திக்கச் செய்கின்றது. அதனால் இவர்களின் முடிவுகள் எப்போதுமே சிறந்ததாக இருக்கும்
இவர்கள் சாத்தியமான தடைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றைக் கடக்க பயனுள்ள திட்டங்களை வகுப்பதில் திறமைசாலிகளாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் தீவிர உள்ளுணர்வு மற்றும் புத்திக்கூர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மனித உணர்ச்சிகள் மற்றும் உந்துதல்களைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
பிரச்சினைகளில் உள்ள வாய்ப்புகளை பார்க்கும் இவர்களின் உள்ளார்ந்த திறன் உண்மையைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்கு துணைபுரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |