அப்பாவிகளாகவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசியினர்! உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுக்கும் ஒவ்வொருவரும் நிறம், தோற்றம், உயரம், ஆளுமைகள், திறமைகள் என அனைத்திலும் தனித்துவ தன்மையை கொண்டிருப்பதை போலவே அவர்களின் இயல்பான நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் வேற்றுமைகளை கொண்டிருப்பது இயல்பு தான்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, திறமைகள் மற்றும் இவர்களின் தனிப்பட்ட குணங்களில் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் அப்பாவியான குணம் கொண்டவர்களாகவும், யாரையும் எளிதில் நம்பி ஏமாற்றத்தையே பரிசாக பெறும் துரதிஷ்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்

மீன ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் இயல்பாகவே இரக்க குணம் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் மனநிலையை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் எப்போதும் தங்களுக்குள்ளேயே மறைத்துக்கொள்வதால், மனதளவில் அதிகம் பாதிப்படுவார்கள். இவர்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் கற்பனையிலேயே வாழுவார்கள்.
இவர்கள் சின்ன விடயங்களுக்கு மனதளில் அதிகம் வருதப்படக்கூடியவர்களாகவும், அதிக உணர்த்திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிய முடியாத அளவுக்கு அப்பாவிகளாக இருப்பார்கள்.
கடகம்

கடக ராசியினர் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்கள் இயல்பிலேயே மற்றவர்களின் பாசத்துக்காக ஏங்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்பள் தங்கள் உணர்ச்சிகளுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளதால், பச்சாதாபத்திற்கான குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டிருப்பார்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவதால் அடிக்கடி ஏமாற்றத்தை சந்திப்பார்கள்.
ஆனாலும் இவர்களின் அப்பாவித்தனத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். துரோகத்தையும் தாங்கிக்கொண்டு இவர்களின் அன்புக்குரியவர்களுக்கு நன்மை செய்யும் அளவுக்கு இரக்க குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வாழ்வில் எல்லாவற்றுக்கும் மேலாக உண்மைக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலும் கர்மா பற்றிய கருத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.யார் இவர்களை ஏமாற்றிவிட்டு சென்றாலும், அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு துளியளவும் இருக்காது.
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் மற்றும் அனைவரையும் நம்பும் அப்பாவித்தனம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |