சக்திவாய்ந்த ஆளுமையுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும், அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் சக்திவாய்ந்தவர்களாகவும், எதையும் சாதிக்கும் மனவலிமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி பிறப்பிலேயே அதிக சக்திவாய்ந்த ஆளுமைகளுடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்களாகவும் மர்மம் நிறைந்த குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்கள் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, அறையில் உள்ள அனைவராலும் உணரவும் பயப்படுவதில்லை.
இந்த ராசியினரின் துணிச்சலும் மனவலிமையும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். இவர்கள் தாங்கள் நினைத்ததை நடத்தும் வரையில் ஓய மாட்டார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்மம் ராசி பெண்கள் இருக்கும் இடத்தை ஆளும் அளவுக்கு சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களை அடக்கியாளுவதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் அடக்கப்படும் இடத்தில் சிச்சயம் இருக்க மாட்டார்கள்.
இந்த ராசி பெண்கள் தங்களின் இலக்குகளை அடைவதில் அதிக அக்கறை கொண்டவர்களாகவும் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் துணிச்சலான பெண்களாக இருப்பார்கள்.இவர்கள் உண்மையை சொல்வதற்கு எந்த நிலையிலும் பயப்படுவது கிடையாது.
மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் அதிகம் மனவலிமை கொண்டவர்களாகவும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சரியான முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி ஆண்களுக்கு நிகராக உழைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் பயம் என்ற நாமமே அறியாதவர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |