அட்சய திருதியை நாளில் இந்த பொருள் மறக்காம வாங்குங்க.. அதிர்ஷடம் இரட்டிப்பாகும்
“அட்சய திருதி” நாளை இந்து மதத்திலுள்ளவர்கள் புனிதமான நாளாக பார்க்கிறார்கள். இந்த நாளில் பொருட்கள் வாங்கினால் அதன் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தங்கம், வெள்ளி வாங்கினால் நல்லது நடக்கும் என பலரும் அதை தான் வாங்குவார்கள். இதனால் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்கும்.
லட்சுமி தேவியின் ஆசியால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இது போன்று அட்சய திருதி நாளில் தானங்கள் செய்யலாம். இதுவும் எண்ணற்ற நன்மைகளை கொண்டு வரும். இந்த ஆண்டு வரும் அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டில் வரும் அட்சய திருதியை மிகவும் விஷேசமானது. ஏனென்றால் 2025 ஆம் ஆண்டு வரும் அட்சய திருதியை திதியானது ரோகிணி நட்சத்திரத்தன்று வருகிறது.
ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திரன் இருப்பதால் அட்சய திருதியை நாளில் ஒருவரது அதிர்ஷ்டம் அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் எனக் கூறப்படுகிறது.
அந்தவகையில், ஒருவர் ராசிக்கு ஏற்ப பொருட்களை வாங்கினால் மங்களம் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. அப்படியாயின், எந்த ராசியில் பிறந்தவர்கள் என்னென்ன பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மேஷம் | வெள்ளி அல்லது தங்க நாணயங்கள் வாங்கலாம். இது உங்களின் விருப்பத்தையும் முடிவுகளையும் வலுப்படுத்தும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் இருக்கின்றதால் சிவப்பு நிற ஆடைகள், பருப்பு வகைகள் அல்லது வெல்லம் உள்ளிட்டவைகளை தானமாக கொடுக்கலாம். |
மிதுனம் | மொபைல், லேப்டாப், புத்தங்கள் போன்ற பொருட்கள் வாங்கலாம். மரகதம் போன்ற பச்சை நிற நகைகள் வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். மிதுன ராசிக்கு அதிபதியாக புதன் இருப்பதால் பென்சில், பேனா, பச்சை நிற ஆடைகளை மாணவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். |
கன்னி | தங்க நாயணங்கள், செடிகள், ஆர்கானிக் உணவுக் கூடைகள் போன்ற பொருட்களை வாங்கலாம். இந்த ராசியின் அதிபதியாக புதன் இருக்கிறார். மருந்துகள், பச்சை நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்தால் தனிப்பட்ட ஆற்றல் மேம்படும். |
விருச்சிகம் | கருப்பு ரூர்மலைன் படிகங்களை வாங்குவது, பரம்பரை நிலத்தை வாங்குவது போன்றவற்றை வேலைகளை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் இருப்பதால் சிவப்பு நிற பருப்பு மற்றும் குங்குமப்பூவை தானம் செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சைகளுக்கும் உதவிச் செய்யலாம். |
மீனம் | சங்கு, ஆன்மீக புத்தகங்கள், ஓவியங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வெள்ளி விஷ்ணு சிலையை வாங்குவது மிகவும் நல்லது. மீன ராசியின் அதிபதி குரு பகவான் என்பதால் அத்தியாவசிய பொருட்களை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).