இன்னும் 2 மாதத்தில் ராஜயோகம்- பணம் கொட்டப் போகும் ராசிகள் யார் யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டது போன்று கிரகங்களின் இளவரசராக பார்க்கப்படும் புதன், செல்வ செழிப்பை அதிகம் தரும் கிரகமாகும்.
வணிகம், புத்திக்கூர்மை மற்றும் பேச்சாற்றல் போன்றவற்றின் அதிபதியாகவும் இருக்கிறார்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.
புத்தாண்டில் பிப்ரவரி மாதம் புதன் குடும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த பெயர்ச்சி அதே மாதம் வக்ர நிலைக்கு மாறுகிறது.
புதன் வக்ர நிலையில் பயணிக்கும் பொழுது அதன் தாக்கம் 12 ராசியினருக்கும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே அமோகமான மாற்றங்களாக மாறுகிறது.
அந்த வகையில், புத்தாண்டில் புதன் பெயர்ச்சியால் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை பார்க்கப் போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. ரிஷபம் ராசியினர்
ரிஷப ராசியின் நீண்ட நாட்கள் முற்றுப்பெறாமல் இருந்த காரியங்கள் இந்த காலப்பகுதியில் நிறைவடையும். ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்பு இருந்தது விட வருமானம் அதிகரிக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர்கள் என்றால் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அமைவார்கள். நீண்ட நாட்களாக இருக்கும் கெட்ட பெயர்கள் நீங்கி, நல்ல மதிப்பு உண்டாகும்.
2. மிதுன ராசியில் பிறந்தவர்கள்
மிதுன ராசியினர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். சரியான வேலைவாய்ப்பு கிடைக்கும். வணிகம் தொடர்பிலான வருமானங்கள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகமாக அக்கறை கொள்ளுங்கள். செய்யும் காரியங்களில் பொறுமை காத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. துலாம் ராசியினர்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலப்பகுதியில் ஏற்கனவே இருந்த எதிரிகளின் தொல்லை நீங்கும். வேலைச் செய்யும் இடத்தில் பணியுயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் சண்டைகள் இருந்தால் அதுவும் நீங்கும். சமூகத்தில் இருந்த அவப்பெயர் நீங்கி நல்ல மரியாதை கிடைக்கும். தொழில் செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதனை பயன்படுத்தி லாபம் பெற்றுக் கொள்ளுங்கள். வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைத்தால் அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |