துரதிஷ்டசாலி கை விரலில் இருக்கும் இந்த அடையாளம்.. உங்களுக்கு இருக்கா?
பொதுவாக அதிர்ஷ்டம், துரதிஷ்டம் இரண்டும் மனிதர்களின் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.
ஆனால் அதிர்ஷ்டம் வரும் பொழுது மகிழ்ச்சியாக அனுபவிப்பது போன்று துரதிஷ்டம் வரும் பொழுதும் அதனை கடந்து போக கற்றுக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதை சில அறிகுறிகளை பார்த்து தெரிந்து கொள்வது போன்று துரதிஷ்டம் வரப்போகிறது என்பதையும் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், துரதிஷ்டசாலிகள் கையில் உள்ள சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் என கைரேகை சாஸ்திரம் கூறுகிறது. அப்படியான அறிகுறிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
கைரேகை சாஸ்திரம் கூறுவது என்ன?

அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இரண்டும் சாமுத்ரிக் சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது. அதில், கைரேகை சாஸ்திரம் சாதாணமாக விடயங்களையும் தாண்டி ஒருவரின் இறப்பு வரை கணிக்க முடியும். இன்னும் சிலர் நகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து கணிக்கிறார்கள்.
கெட்ட சகுனத்திற்கான அறிகுறிகள்
1. உங்களுடைய கட்டை விரலில் ஒரு கரும்புள்ளி இருந்தால் உங்களுக்கு எதிர்காலத்தில் நெருக்கடியான நிலை வர வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

2. ஆள்காட்டி விரலில் கரும்புள்ளி இருப்பவர்கள் பணத்தை அதிகமாக இழக்க வாய்ப்பு உள்ளது.
3. நடு விரல் நகத்தில் கரும்புள்ளி இருப்பின், பாதகமான செய்திகள் அதிகம் வெளிவர ஆரம்பிக்கும்.
4. உங்களுக்கு சமூகத்தில் மரியாதை இழந்தவர்களுக்கு மோதிர விரலில் கரும்புள்ளி இருக்க வாய்ப்பு உள்ளது.
5. கடைசியாக உள்ள விரல் நகத்தில் கரும்புள்ளி இருந்தால் வெற்றி உங்களை நெருங்குவதற்கு அதிகமான நேரம் எடுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |