இந்த ராசி ஆண்கள் பொய் சொல்வதில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, திருமண வாழ்க்கை,நிதி நிலை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பொய்யை உண்மை போல் மிகவும் நேர்த்தியாக சொல்லும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி பொய் சொல்வதில் பிறவியிலேயே திறமைசாலிகளாக திகழும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மிகவும் கவர்ச்சிகரமான, பொய்யர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுடன் எளிதில் நண்பர்களாகிவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக சில சமயங்களில் பொய் சொல்லுவார்கள்.ஆனால் இவர்களின் பொய்யில் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் இருக்காது.
இந்த ராசி ஆண்கள் பொய் சொன்னால் நிச்சயம் யாராலும் கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியும் முழுமையும் இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமான இயல்புடையவர்களாகவும் தங்களின் தனிப்பட்ட விடயங்களை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் தனிப்பட்ட விடயங்களில் ரகசியம் காப்பதற்காகவே இந்த ராசி ஆண்கள் அதிகம் பொய் சொல்லுவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான மற்றும் ரகசிய ஆற்றலைப் பயன்படுத்தி வேறு எந்த ராசியாலும் முடியாத வகையில் உண்மையை கையாள முடியும். இவர்கள் பொய் சொல்வதில் மட்டும் வல்லவர்கள் அல்ல ரகசியம் காப்பதிலும் வல்லவர்கள்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சில விடயங்களை முட்டாள்தனமாகவும், வினோதமாகவும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை சில சமயம் அதிகமாக பொய் சொல்வதற்கும் தூண்டுகின்றது.
இவர்கள் தாங்கள் கேள்விப்பட்ட விடயத்தை அப்படியே சொல்லாமல் சற்று சுவாரஸ்யமாக சொல்லும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதால், இவர்களின் பேச்சில் பொய் கலந்திருப்பது இயல்ப்பு.
ஆனால் இவர்கள் சொல்லும் பொய்யை யாராலும் பொய் என நிரூபிக்க முடியாதபடி செய்துவிடுவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        