இந்த ராசி பெண்ணா நீங்க? அப்போ தவறான நபரை காதலித்து சிக்கலில் மாட்டிப்பீங்களாம்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்கையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்களுக்கு இயல்பாகவே காதல் விடயத்தில் அதிக சிக்கல்கள் ஏற்படும்.
இவர்கள் பெரும்பாலும் காதலில் தவறான நபர்களை தெரிவு செய்துவிட்டு பின்னர் அதற்காக வாழ்நாள் முழுவதும் வேதனைப்படுவார்களாம்.
இப்படி காதலில் அதிக சிக்கல்களை சந்திக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அவர்களின் மிகவும் மன உறுதி கொண்டவர்களான இருப்பார்கள்.
இவர்களுக்கு தங்களை மாற்றிக்கொள்ளும் குணம் சற்று குறைவாகத்தான் இருக்கும். இதனால் இவர்கள் காதல் விடயத்தில் மிகவும் விரைவாகவே உறுதியான முடிவை எடுத்து விடுகின்றனர்.
இவர்கள் ஒருவரை காதலிக்க முடிவு செய்தவுடன், அவர்கள் மீது வெறித்தனமான இருப்பார்கள். அதனால் தவறானவர்கள் மீது காதலில் விழும் வாய்ப்பு அதிகம்.
இவர்கள் காதலிப்பவர்கள் தவறானர்கள் என்று உணர்ந்த பின்னரும் கூட இந்த ராசி பெண்களால் தங்களின் மனதை மாற்றிக்கொள்ள முடியாமல் அவஸ்த்தைப்படுவார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவை எளிதில் மறக்க மாட்டார்கள். . காதல் என்று வரும்போது, அவர்கள் சரியான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
ஆனால் பல சமயங்களில் இவர்களின் தெரிவு இவர்களின் அவசர குணம் காரணமாக தவறாக முடிவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே காதல் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் காதலிக்கும்போது, அவர்கள் தேர்ந்தெடுத்த நபர் சரியானவராக இல்லாவிட்டாலும், அவர்கள் தங்கள் துணைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
இவர்கள் வாழ்வில் காதல் விடயத்தில் தான் அதிக பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |