Astrology: இந்த ராசியில் பிறந்தவங்க ஆபத்தான காதலராக இருப்பார்களாம்- உங்க துணை என்ன ராசி?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஏதோ ஒரு வகையில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். காதல் வாழ்க்கை என்பது நபருக்கு நபர் வேறுப்பட்டதாக இருக்கும்.
ஒரு வயதை அடைந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு துணையை தேடி அவர்களை பல வழிகளில் காதலிப்பார்கள். அதன்படி சில ராசிக்காரர்கள் காதலில் மோசமானவராக இருக்கும் வழக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு காதல் என்பது கட்டுப்படுத்துதல், கையாளுதல் அல்லது தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் இருத்தல் உள்ளிட்ட மோசமான நடத்தைகளை கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களின் துணை கஷ்டப்பட்டு வாழ்வார்கள்.
அதிலும் குறிப்பாக ஆண்கள் இப்படியான மனநிலையில் இருக்கும் பொழுது பெண்கள் என்ன செய்வது என புரியாமல் விலகி விடுவார்கள். இந்த பண்புகள் கொண்டவர்களை ராசிகள் அடிப்படையில் முதலில் கண்டறிந்து கொண்டால் நீங்கள் அவர்களிடம் இருந்து தப்பிக் கொள்ளலாம்.
அந்த வகையில், காதலில் மோசமானவர்களாக இருக்கும் ராசிகள் என்னென்ன ராசியில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் | மிதுன ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வார்கள் என்பதனை கணிக்க முடியாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் துணையை எப்போதும் கவலையாகவே வைத்திருப்பார்கள். சிலர் விசுவாசமின்றி இருக்கலாம் அல்லது உறவில் உறுதியுடன் இருப்பதைத் தவிர்க்கலாம் போன்று நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். மாறிவரும் அவர்களின் மனநிலைகள் உறவுகளில் ஏற்ற தாழ்வுகளை உண்டுபண்ணும். துணையின் அழுத்தங்களை புரிந்து கொள்ளாது நச்சுத்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். |
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் அமைதியற்றவர்களாக இருப்பார்கள். சிந்திக்காமல் செயற்படுவதால் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்கள. பொறுப்பற்ற காதலராக அறியப்படுவதால் துணையை உணர்ச்சிரீதியாக காயப்படுத்தும் குணம் இருக்கும். போட்டியுணர்வு உறவில் மன அழுத்தம் மற்றும் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும், இதனால் இருவருக்கும் இடையில் முடிவில்லாத மோதலில் ஈடுபடுவார்கள். |
விருச்சிகம் | மற்ற ராசிகளை விட விருட்சக ராசியில் பிறந்தவர்கள் சொந்த பாதுகாப்பின்மையுடன் செயற்படுவார்கள். துணையையும் அப்படி நடத்துவதால் உறவில் பிரச்சினை ஏற்பட ஆரம்பிக்கும். நீண்ட கால வெறுப்பை மனதில் வைத்துக் கொண்டு நிறைய உணர்ச்சி மற்றும் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துவார்கள். காதல் உறவில் நம்பிக்கை பிரச்சினைகள் மற்றும் பொறாமை பெரிய தடைகளாக இருக்கலாம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).