பாபா வங்கா கணிப்பு: மே 2026-ல் இந்த ராசிகளுக்கு பேராபத்து... யார் அவர்கள்?
பாபா வங்காவின் கணிப்பு படி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு 2026 மே மாதம் கவலைக்குரிய மாதமாக இருக்குமாம். இதனால் அந்த ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாபா வங்கா
பாபா வங்கா பல விடயங்களை தனது தீர்க்கதரிசனங்கள் மூலம் கூறி உள்ளார். அவர் கூறிய பல விடயங்கள் இப்போதும் நடைபெறுகிறது.

தன்னுடைய பார்வை இழந்த பின்னர் தனக்கு தீர்க்க தரிசனம் மூலம் தோன்றிய எல்லா விடயங்களையும் அவர் அவருடைய குறிப்பில் எழுத அதன்படியே வரிசையாக நடைபெற்ற சம்பவங்கள் ஏராளம்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக சில ராசிகளை சேர்ந்தவர்கள் செல்வந்தர்களாக மாறப்போகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்கள் மே மாதம் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். நீங்கள் செய்த வேலைக்கு எந்த பயனும் இல்லை என்ற கட்டம் உருவாகும் இதனால் மன அழுத்ததில் இருப்பீர்கள். உங்களை யாரும் மதிக்காத சூழ்நிலை உருவாகும். இந்த மாதம் சில மனக்குழப்பங்கள் ஏற்படும். கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்க தோமதமாகும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம்.
மிதுனம்
- பாபா வாங்காவின் கணிப்பின்படி, மிதுன ராசிக்காரர்கள் மே மாதம் பிரச்சனைக்குரிய மாதமாக இருக்கும். உங்களுக்கு நிதி மேலாண்மை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். மன அழத்தம் அதிகமாக வரும். பணம் சம்பந்தமான தவறான முடிவுகளால் நஷ்டம் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசிப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். மே மாதம் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டினால் சிக்கல்கள் அதிகரிக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகள் வரும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வரவு-செலவு கணக்கில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போக்குவரத்தின்போது நிதானம் தேவை.
மகரம்
- வேலை செய்யும் இடத்தில் மோதல்கள் உருவாகும். இதனால் அங்கு உங்களுக்குக் கடினமான சூழல் உருவாகலாம். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக தான் கிடைக்கும். எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். வேலையில் முன்னேற்றம் இருக்கும், ஆனால் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல் இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).