சாப்பிவதற்கே பிறப்பெடுத்தவர்கள் இந்த 3 ராசிகள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, தோற்றம், விசேட திறமைகள் உட்பட அவர்களின் நேரை்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் விடவும் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் விதவிதமான உணவுகளை சுவைப்பதில் தான் அதிக மகிழ்ச்சியடைவார்கள். அப்படி உண்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் சாப்பாட்டு பிரியர்களாக திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

இன்பத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் ஆறுதல், ஆடம்பரம் மற்றும் நிச்சயமாக, சுவையான உணவு ஆகியவற்றின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு சுவையான உணவுகளை உண்பதில் கிடைக்கும் அனுபவம் மற்றவர்களை விடவும் அலாதி இன்பத்தை கொடுக்கும். இவர்கள் எதிலும் தனித்துவத்தை விரும்புவதால், உணவிலும் அதையே எதிர்பார்கின்றார்கள்.
அவர்கள் செழுமையான சுவைகள், சிறந்த உணவு மற்றும் அரவணைப்பையும் திருப்தியையும் தரும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மீது தீராத ஆசையை கொண்டிருப்பார்கள்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசியினர் குடும்பம் மற்றும் மரபுகளுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளதால், பாரம்பரிய உணவுகள் மீது இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.
மற்றவர்கள் முயற்ச்சி செய்யவே தயங்கும் உணவுகளையும் இவர்கள் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே இயற்கை மீதும் உணவுகள் மீதும் தனி பிரியம் இருக்கும்.
அன்புக்குரியவர்களுக்காக சமைப்பதிலும், மக்களை ஒன்றிணைக்கும் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் தான் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சுதந்திரத்தின் மீதும் உணவுகள் மீதும் தீராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கை ஒரு சாகச நிகழ்வாகவே பார்க்கின்றனர்.
விரிவாக்கத்தின் கிரகமான குருவால் ஆளப்படும் அவர்கள், புதிய கலாச்சாரங்கள், சுவைகள் மற்றும் கவர்ச்சியான உணவு வகைகளை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.
அவர்கள் சாப்பிடுவதும் உலகை அனுபவிப்பதற்கான ஒரு வழியாகவே கருதுகின்றார்கள். அவர்கள் ஒரு நாட்டில் தெரு உணவையும், மற்றொரு நாட்டில் சிறந்த உணவையும் ருசிப்பார்பதை மகிழ்சியின் உச்சமாக கருதுகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |