நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? இதோ முழு விபரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு இன்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இவரது சொத்து மதிப்பு குறித்த விபரத்தை தெரிந்து கொள்வோம்.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வந்த சிம்பு, தற்போது நடிகராகவும், பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமைகளைக் கொண்டுள்ளார்.
வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வி பின்பு ஆன்மீக பாதை என சென்ற சிம்பு தன்னைப்பற்றி வரும் விமர்சனங்களுக்கு எப்பொழுதும் காது கொடுப்பதில்லை. அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கின்றார்.

ஆன்மீகத்தில் சென்றதால் படத்தில் நடிக்க மாட்டார் என்று நினைத்த தருணத்தில் மாநாடு படத்தின் மூலம் மீண்டும் நடித்து 100 கோடிக்கு மேல் வசூலையும் பெற்றார்.
பின்பு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அதிகமான வெற்றிபடங்களையும் கொடுத்தார். தற்போது அரசன் படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சொத்து மதிப்பு என்ன?
நடிகர் சிம்புவிற்கு 100 முதல் 120 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. சென்னையில் பல கோடி மதிப்புள்ள பங்களாவில் நவீன வசதியுடன் ரெக்கார்டிங் ஸ்டூடியோ அமைந்துள்ளதாகவும், இதிலே இவரது பாடல் பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.
படம் ஒன்றிற்கு 20 முதல் 30 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படும் சிம்புவிடம் வேல் ஃபயர், மினி கூப்பர் என பல சொகுசு கார்களும் உள்ளதாம்.

துபாயில் புதிதாக வில்லா ஒன்றையும் சிம்பு வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அதிலும் அஜித்தின் வீடு அமைந்துள்ள பகுதியில் தான் இந்த வில்லா இருக்கின்றதாகவும் கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |