முத்தம் கொடுப்பதில் கைதேர்ந்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
பொதுவாகவே அன்பை வெளிப்படுத்தும் எளிமையான வழி என்னவென்றால் அது முத்தம் தான். குறிப்பாக காதலை பொருத்தவரையில் முத்தம் மிகமுக்கிய இடம் வகிக்கின்றது.
உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டங்கள் கலைக்கட்ட ஆரம்பித்துவிட்ட நிலையில் பூக்கள், பரிசு பொருட்கள், பொம்மைகள் என நேசிப்பவருக்கு தன் அன்பை ஒவ்வொரு முறையில் வெளிப்படுத்துவார்கள்.
இருப்பினும் நீங்கள் கொடுக்கும் பரிசு பொருட்களை விட நீங்கள் காதலோடு கொடுக்கும் ஒரு முத்தம் உங்கள் அன்பை எளிதாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தக்கூடியது.
உலகில் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த விஷயம் என்றால் அது முத்தம்தான். இது காதலன், காதலிக்கு மட்டுமல்ல அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். முத்தம் கொடுப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளும் கூட கிடைக்கிறது.
அந்த வகையில் ஜோதஜட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளில் முத்தம் கொடுப்பதில் வல்லவர்களாக திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் பொதுவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராக இருக்கமாட்டார்கள். ஆனால் தான் காதலிக்கும் நபரிடம் உணர்வுகளை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார்களாம்.
உணர்வுகளை வெளிப்படுத்த இவர்கள் தேர்வு செய்யும் சிறந்த வழி முத்தம் தான். இவர்களுடனான முத்தம் முடிவடையக் கூடாது என்று எண்ணுமளவிற்கு இவர்கள் முத்தம் கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்களாம்.
கடகம்
கடக ராசியினர் இயல்பிலேயே மிகவும் பாசமானவர்கள். மற்றும் அவர்களின் முத்தம் அவர்களின் மீது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கும். இந்த ராசியினர் இயல்பிலேயே முத்தம் கொடுப்பதில் வல்லவர்கள்.
மேஷம்
மேஷ ராசியினர் சுவாரஸ்யமான முத்த நிபுணர்கள் என்றே கூற வேண்டும். முத்தம் கொடுப்பதையே ஒரு கலையாக எண்ணுபவர்கள்.இவர்கள் தன்னை விட்டு பிரிய கூடாது என துணைக்கு புரிய வைக்கும் வகையில் முத்தம் கொடுப்பார்களாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |