வீட்டில் இதெல்லாம் அடிக்கடி நடக்குதா? இவை ஆபத்தை எச்சரிக்கும் அறிகுறிகள் ஜாக்கிரதை..!
பொதுவாகவே வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையாகது தான். ஒரு பருவத்தில் கஷ்டப்பட்டவர்கள் இன்னொரு காலத்தில் நன்றாக வாழ்வார்கள். இதுவே இயற்கையின் நியதி.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலை நன்றாக இருந்தால், ஆண்டியும் அரசனாவான்.அதே போல கிரக நிலைகள் சரியில்லாத போது வாழ்கையில் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகும்.
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கெட்ட விடயங்கள் அல்லது ஏதோ கெட்ட விடயம் நடக்க போகிறது என்றால் அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரியும்.
ஒருவர் வாழ்க்கையில் பிரச்சனைகளை அல்லது துரதிர்ஷ்டத்தை சந்திக்கப்போகிறார்கள் என்பதற்கு முன்கூட்டியே சில அறிகுறிகள் தென்படும் என குறிப்பிடப்படுகின்றது.
அவ்வாறு வாழ்வில் கஷ்டம் ஏற்பட போவதை உணர்த்தும் அசுப அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
அசுப அறிகுறிகள்
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி செடி மிகவும் புனிதமானமதாக கருதப்படுகின்றது. மேலும் துளசி லட்சுமி மற்றும் விஷ்ணுவின் வடிவமாகவும் பார்க்கப்படுகின்றது. துளசி செடியை வீட்டில் பசுமையாக வைப்பதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் வீட்டில் வைத்திருக்கும் துளசி செடி அடிக்கடி வாடினால் அது அசுப அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. துளசி வாடினால் வீட்டில் எதிர்மறையான சக்திகள் அதிகரிக்கும்.
இது வீட்டில் உள்ளவர்களுக்கு துன்பம் வரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாகவே பார்க்கப்படுகின்றது.
வீட்டில் அடிக்கடி கண்ணாடி உடைந்தால் ஏதோ அசுப விடயம் நடக்கப்போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்கள் அல்லது பீங்கான் ஆகியவை மோசமான நிகழ்வுகளை குறிப்பவை.
அடிக்கடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் ஏதோ நெருக்கடி வரப்போகிறது என்று அர்த்தம். அதே போல், கண்ணாடித் துண்டுகள் அல்லது உடைந்த பாத்திரங்களை வீட்டில் வைத்தால் அவை எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும்.
வீட்டில் வைத்திருக்கும் அல்லது அணிந்திருக்கும் தங்கம் காணமால் போவதும் இந்து சாஸ்திரத்தில் அசுப அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது. இந்த அறிகுறிகள் பல இழப்பை குறிக்கிறது.எனவே இவ்வாறான சம்பவங்கள் வீட்டில் நிகழ்ந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |