பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே பெரும்பாலான பேரக்குழந்தைகளுக்கு தாய், தந்தையை விடவும் தங்களின் பாட்டியை தான் அதிகம் பிடிக்கும், காரணம் அவர்கள் செய்யும் தவறுகளை முதலில் தெரிந்துக்கொண்டு பெற்றோரிடமிருந்து காப்பாற்றுவது பெரும்பாலும் பாட்டிகள் தான்.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் பேரக்குழந்தைகளை தலைக்குமேல் தாங்கும் பாட்டிமார்கள் எந்தெந்த ராசியினர் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
நீங்கள் கண்களை மூடிக்கொண்டு ஒரு பாட்டியை கற்பனை செய்தால்,அவர்களின் குணங்கள் எல்லாம் நிச்சயம் கும்ப ராசி பாட்டிகளிடம் தான் இருக்கும்.
இவர்கள் மகள் அல்லது மகளை விடவும் தங்களின் பேரக்குழந்தைகள் மீது அக்கறையும் பாசமும் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளை ஒரு போதும் யாரிடமும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
பேர குந்தைகள் தப்பே பண்ணியிருந்தாலும் அவர்களுக்காக வாதாடுவதற்கு இந்த ராசி பாட்டிமார்கள் எப்போதும் தயாரா இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் தாங்கள் பாட்டி என்ற அந்தஸ்தை பெற்றவுடன் மிகவும் பொறுப்பானவர்களாக மாறிவிடுவார்கள். இவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
இந்த ராசி பாட்டிமார்கள் அன்பானவர், கவர்ச்சியானவர், எப்போதும் ஒரு சாகசத்தில் ஈடுபடுபவர், இவர்களுக்கு இறுதிக்காலத்தில் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.
மக்களால் சூழப்பட்டிருப்பதை இவர்கள் விரும்புகின்றார்கள். இவர்கள் பேரக்குழந்தைகளை சரியான முறையில் வளர்த்துவிட வேண்டும் எனும் நோக்கத்தில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசி பாட்டிகள் மிகவும் அன்பானவர்கள், குறிப்பாக அவர்கள் குழந்தைகளைப் பராமரிக்க விரும்புவதால் இவர்கள் உலகின் தலைசிறந்த பாட்டிமார்களாக அறியப்படுகின்றார்கள்.
இந்த ராசிக்காரர்கள் கற்பனை விளையாட்டு போன்ற படைப்பு செயல்பாடுகளை விரும்புகிறார்கள் அதனால் இவர்கள் தங்களின் பேரக் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த பாட்டியாகவும் ஒரு நண்பியாக இருப்பார்கள்.
இந்த ராசியினரை பாட்டியாக பெற்ற பேரக்குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் பேரக்குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |