இந்த ராசியினரை மகளாக பெற்றவர்கள் அதிஷ்டசாலிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தங்களின் உறவுகள் தங்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். குறிப்பாக பாசம் என்ற ஒரு விடயத்தை தான் அனைவரும் எதிர்ப்பார்க்கின்றோம்.
அந்தவகையில் ஒருவருடைய பிறப்பு ராசிானது அவர்களின் குணங்களில் பெருமளவில் ஆதிகம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் பெற்றோருக்கான எதையும் செய்ய தயாராக இருப்பார்களாம்.
அப்படிப்பட்ட உன்னத குணம் கொண்ட உலகில் தலைசிறந்த மகள்களாக இருக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பிலேயே தலைமைத்துவ குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் யாருக்கும் எளிதில் அடிப்பணிய மாட்டார்கள். ஆனால் தங்களின் பெற்றோருக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் தைரியமான மகள்களாகவும் எதிர்காலத்தில் தைரியமான தாயாகவும் இருப்பார்கள். இவர்கள் பெற்றோருக்கு வயதான காலத்தில் சிறந்த வாழ்ககையை நிச்சயம் பரிசளிப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த மகள்களாக இருப்பார்ள். அவர்களின் பெற்றோரால் கூட தீர்க்க முடியாத மர்மங்கள் இவர்களிடம் இருக்கும்.
இந்த ராசியினர் அவர்கள் ரகசியங்களை நெருக்கமாக வைத்திருக்கிறார்கள், காயங்களை நெருக்கமாக வைத்திருக்கிறார்கள், அரிதாகவே உதவி கேட்கிறார்கள்.இவர்கள் பெற்றோருக்கு எந்த விதத்திலும் துன்பத்தை ஏற்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் சிறிய விடயங்களிலும் பெற்றோரின் மகிழ்சியை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே பெற்றோருக்கு அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் வாழ்வில் பெற்றோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெளிப்படைய சொல்லாவிட்டாலும் தங்களின் தாய், தந்தையின் மீது அதிக பாசம் கொண்டவர்களா இருப்பார்கள். இவர்களின் பெற்றோருக்காக தங்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்யவும் கூட தயாராக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |