இந்த ராசியினர் பணத்தை பெருக்கும் கலையில் கில்லாடிகள்.. யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் கொண்டிருக்கும்.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வாழ்வில் பணத்துக்கு கஷ்டப்பட வேண்டிய நிலை ஒருபோதும் ஏற்படாதாம்.
அப்படி வாழ்க்கை முழுவதும் சகல செல்வ செழிப்புடனும், பணத்துக்கு பஞ்சமின்றி வாழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆயளப்படும் ரிஷபம் ராசியினர் இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவரை்களாக இருப்பார்களாம்.
இவர்களுக்கு சொகுசு வாழ்க்கை மற்றும் ஆடம்பரத்தின் மீது அதீத ஈர்ப்பு காணப்படும். இதன் விளைவாக இவர்கள் ஆழ்மனம் அதனை நிச்சயம் ஈர்க்கும்.
இவர்கள் வாழ்வில் பணத்துக்கு போராட வேண்டிய அவசியம் இருக்காது. சுக்கிரனின் ஆசியால் இவர்களை தேடி ஏதாவது ஒரு வழியில் பணம் வந்துக்கொண்டே இருக்கும்.
சிம்மம்
சூரியன் சிம்ம ராசியை ஆட்சி செய்வதால், வெற்றி அவர்களின் விதியிலேயே எழுதப்பட்டிருக்கும். இவர்கள் அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள்.
பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்கள் கொண்ட இவர்கள், இருக்கும் இடத்தில் தங்களின் ஆதிகம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களின் அதிர்ஷ்டம் இவர்களுக்கு குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றியையும் செல்வத்தையும் கொடுக்கும்.இவர்கள் வாழ்வில் பணகஷ்டத்தை அனுபவிக்க நேரிடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கடினமான உழைப்புக்கு பெயர்பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் செய்யும் செயல்களில் முழுமையும் நேர்த்தியும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் திறமையான சேமிப்புத் திறன்களால் பணத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.
இருக்கும் பணத்தை சரியாக முகாமைத்துவம் செய்து பணத்தை இரட்டிப்பாக்கும் கலையில் இவர்கள் கில்லாடிகள். இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே் ஏற்படுவது மிக மிக அரிது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).மனிதன் திரைப்படம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |