மிஞ்சிய சப்பாத்தி மாவை ஃபிரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறுமா?
பலரது விடுகளில் பொதுவாக சப்பாத்தி வெய்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் அதிகமான மாவை பிசைந்து விட்டால் அதை எடுத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பார்கள்.
பொதுவாக வீட்டில் நாம் தேவைக்கு பயன்படுத்தி விட்டு மீதமாக மிஞ்சும் உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பது வழக்கம்.
ஆனால் அதில் எந்த உணவுகளை வைக்க வேண்டும் எந்த உணவுகளை வைக்க கூடாது என்பதை அறிந்திருப்பது அவசியம். அப்படி தான் இந்த பதிவில் சப்பாத்தி மாவை குளிர்சாதன பெட்டியில் வைப்பது விஷமாக மாறுமா என்பதை பார்க்க போகிறோம்.
பிசைந்த சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
இந்த பிசைந்த சப்பாத்தி மாவை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார். பிசைந்த ரொட்டி மாவை/சப்பாத்தி மாவை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதனால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு அல்லது தரத்தை பாதிக்காது.
குளிர்சாதன பெட்டியில் வைக்கபட்ட மாவை மென்மையாகவும் எளிதாகவும் உருட்டி ரொட்டிகளை, சப்பாத்திகளை தயாரிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 15-20 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் இருந்து மாவை வெளியே எடுக்கவும்.
இது அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து, மென்மையாகவும் கையாள எளிதாகவும் இருக்கும். மாவு அறை வெப்ப நிலையில் வைப்பதை விட ஃப்ரிட்ஜில் நீண்ட நேரம் புதியதாக இருக்கும்.
சரியாக சேமித்தால் ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு மாவை பயன்படுத்தலாம். அதே சமயம் நீண்ட காலம் ஃபிரிட்ஜில் மாவை வைத்தால் அது பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எத்தனை நாட்கள் சேமிக்கலாம்
மாவு பிசையும் பொழுது தண்ணீர் சேர்க்கப்படுவதால் மாவில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதை நீண்ட நேரம் அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் பொழுது இயற்கையான பூஞ்சை தொற்று ஏற்படலாம்.
இதனால் மாவு புளித்து ஒரு வித்தியாசமான வாசனை வெளிப்படும். இந்த புளித்த மாவை சாப்பிடுபவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி, வயிறு கோளாறுகள், புளித்த ஏப்பம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
சில நேரங்களில் நாம் நீண்ட நாட்களாக குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தும் மாவால் அதிக ஆபத்து ஏற்படும். இது மிகவும் அரிதானது ஆனால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்.
மாவை விஷமாக்கும் காரணிகள்
மாவு சுத்தமாக பிசையப்படாமல் அல்லது அழுக்கான பாத்திரத்தில் பிசைந்த மாவை எடுத்து சேமித்து வைத்தால் சால்மனல்லா, ஈகோலி போன்ற பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. இது விஷத்தன்மையை ஏற்படுத்தலாம்.
குளிர்சாதன பெட்டியில் மாவு சரியாக மூடி வைக்க வேண்டும். இல்லையேல் மற்ற உணவுப் பொருட்களில் இருந்து மாவுக்கு கிருமிகள் பரவும் வாய்ப்பு உண்டு. மாவு நீண்ட நேரம் ஃபிரிட்ஜில் இருக்கும் பொழுது ஈரப்பதம் மற்றும் பிற காரணங்களால் பூஞ்சைகள் உருவாகும்.
இதனால் தான் சில நேரங்களில் மாவின் மீது பச்சை அல்லது கருப்பு புள்ளிகள் தோன்றுகின்றன. பூஞ்சை உள்ள மாவு விஷமாக இருக்கலாம். இதை சாப்பிட கூடாது. இவை சாப்பிடுவதற்கு பாதுகாப்பற்றது.
மாவு ஆரம்பத்திலேயே தரமற்றதாக இருந்தால் அதை ஃபிரிட்ஜில் வைத்தாலும் விரைவில் கெட்டுவிடும். மாவு பிசையும் போது நல்ல சுத்தமான நீரை பய்ன்படுத்தாவிட்டாலும் மாவு விஷமாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |