வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் விசேட குணங்களிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் சிறுவயதிலேயே அதிக அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் வயதுக்கு மீறிய புத்திசாலித்தனத்துடன் அனைத்து துறைகள் சார்ந்த அறிவையும் கொண்டிருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுவதால், வலுவான உள்ளுணர்வு மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்வுகளை கூட சொல்லாமலேயே சரியாக புரிந்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பாகவே அனைத்து துறைசார்ந்த பொதுவான விடயங்களிலும் அதிகளவாக அறிவாற்றல் இருக்கும்.
எப்போது இவர்களின் வயதுக்கு அறிந்திருக்க வேண்டிய விடயங்களை விடவும் அதிகமான விடயங்கள் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் உள்ளுணர்வு மற்றும் ஞானத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் அதீத ஆர்வம் தங்களின் வயதுக்கு மீறிய விடங்களையும் அறிந்துக்கொள்ள இவர்களை தூண்டுகின்றது.
இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆழமான உணர்ச்சிப் புரிதலை கொண்டிருப்பதுடன், நிதி முகாமைத்துவ அறிவு மற்றும் உலகத்து பொது அறிவையும் நன்கு அறிந்திருப்பார்கள்.
வெளித்தோற்றத்தைப் பார்த்தே, அதன் ஆணிவேர் வரை குறிப்பிடும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறப்பெடுத்தவர்கள் ஒழுக்கம், லட்சியம் மற்றும் பொறுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினருக்கு பொது விடயங்கள் சார்ந்த அறிவு அதிகமாக இருப்பதுடன் எதிர்காலத்தில் நடக்கப்போவதை கூட இப்படி தான் நடக்கும் என முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்தே இவர்களுக்கு மற்றவர்களை விட சற்று அதிக திறமை மற்றும் அறிவு இருக்கும். அவர்களிடம் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்திருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |