காலை வாருவதில் கில்லாடிகளான டாப் 3 ராசிகள்! இவர்களி்டம் ஜாக்கிரதை
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் வெற்றியை கண்டு அதிகம் பொறாமைப்படுபவர்களாக இருப்பார்கள்.

அப்படி மற்றவர்கள் பாரட்டு பெறுவதை ஒருபோதும் தாங்கிக்கொள்ளவே முடியாத ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

அனைத்து கிரகங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் புகழின் உச்சியில் இருக்க விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெறும் போது அவர்களால் அதை சகித்துக் கொள்ள முடியாது. இவர்களின் உழைப்பு கவனிக்கப்படாமல் போகும்போது, பொறாமை ஏற்பட்டு மற்றவர்களை கீழே தள்ளிவிடுவதற்கு என்ன வழி என சிந்திப்பார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினர் மிகவும் மர்மமானவர்கள், தங்களின் உண்மையான உணர்வுகளை எளிதில் வெளிக்காட்ட மாட்டார்கள்.
ரகசியத் தன்மை அதிகம் உள்ள இவர்கள், சில சமயங்களில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவார்.
குறிப்பான தங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்றால் அதற்காக இன்னொருவரின் உழைப்பை கெடுப்பதில் தவறு இல்லை என்ற எண்ணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் தீவிரமான லட்சியவாதிகள் அவர்களின் வெற்றி குறித்தே அதிகம் சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் அதீத வெற்றி மோகம் தங்கள் நண்பர்களின் வெற்றியை கூட தாங்கிக்கெள்ள முடியாத பொறாமை எண்ணமாக மாற வாய்ப்புள்ளது.
இவர்கள் கடின உழைப்பால் வெற்றியடை நினைப்பவர்கள்.ஆனால் அதே கடினமான பாதையைப் பின்பற்றாமல் யாராவது உச்சத்தை அடைந்தால் மகர ராசிக்காரர்கள் விரக்தியடைந்தோ அல்லது கசப்பாகவோ உணர்வதுடன் மற்றவர்களின் வெற்றிக்கு தடையாகவும் இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |