துலாம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!
venus transit in libra : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் சுக்கிரன் அன்பு, திருமணம், உறவுகள், அழகு, ஆடம்பரம், படைப்பாற்றல் மற்றும் செல்வச் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறார்.

சுக்கிரனின் சொந்த ராசியான துலாம், இணக்கம், ஒத்துழைப்பு மற்றும் நல்ல உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நவம்பர் 22ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைந்து, ஜனவரி 1, 2027 வரை அங்கேயே சஞ்சரிக்கப் போகிறார்.
சுக்கிரன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பது ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளும் அதிர்ஷ்டமும் கிடைக்கம் என ஜோதிட ரீதியில் கணிக்கப்பட்டுள்ளது.அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால், திருமண வாழ்க்கை மற்றும் உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வாழ்க்கைத்துணையுடனான பிணைப்பு வலுப்படும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், எதிர்பாராத லாபங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
பெற்றோருடனான உறவு மேம்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால், எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் தொடர்பான பிரச்சினைகள் தீர்ந்து, வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் மற்றும் வணிகத்தில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படலாம். பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடிக்கவும் இது சாதகமான காலமாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அவர்களின் முதல் வீட்டிலேயே சஞ்சரிப்பது சிறப்பான பலன்களைத் தரப்போகின்றது.
ராசி அதிபதியான சுக்கிரனின் இந்த மாற்றம் தனிப்பட்ட வளர்ச்சி, தோற்றம் மற்றும் உறவுகளில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்.
குறிப்பாக தொழில் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன், வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடைந்து, வருமானமும் சேமிப்பும் அதிகரிக்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |