மருமகளையும் மகளாகவே பார்க்கும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை , விசேட ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கம் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் எதிர்காலத்தில் தாய்மை குணம் நிறைந்த மாமியார்களாக நடந்துக்கொள்வார்களாம்.
அப்படி தங்களின் வீட்டுக்கு மருமகளாக வரும் பெண்ணையும் தனது மகளாகவே பார்த்துக்கொள்ளும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பானவே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் விருந்தோம்பலுக்கு பெயர்பெற்றவர்கள்.
மற்றவர்களை கவனித்துக்கொள்வதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்பது போல் நடந்துக்கொள்வார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு மருமகளாக வரும் பெண் கொடுத்து வைத்தவர் என்றே கூற வேண்டும். இவர்கள் தங்களின் மனனுக்கு நிகராக மருமகள் மீதும் அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
எந்த சூழ்சிலையிலும் மருமகளின் மனம் புண்படாத வகையில் நடந்துக்கொள்வார்கள். தங்களின் அறிவுரைகளை அன்பாக அன்னை போல் எடுத்துக்கூறும் குணம் இவரை்களிடம் அதிகமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிகள் இயல்பாகவே அனைத்து உறவுகளுக்கும் மதிப்பளிப்பவர்களாக இருப்பார்கள்.இவர்கள் மாமியாராகும் போது இந்த குணங்களுடன் பொறுமையும் சேர்ந்து ஞானிகள் போல் மாறிவிடுவார்கள்.
இவர்கள் மாமியாராக மாறும் காலத்தில் இவர்களின் பொறுமை குணத்தை யாராலும் வெறுக்கவே முடியாது. அந்தளவுக்கு அன்பானவர்களாகவும் பக்குவமாகவும் நடந்துக்கொள்வார்கள்.
இவர்கள் மருமகளாக வரும் பெண்ணை மகளாகவே நடத்துவார்கள்.மகன் மற்றும் மருமகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து எப்போதும் விலகியிருக்க முயற்சிப்பார்கள்.
இவர்களுக்கு மருமகளாக வரும் பெண்ணுக்கு முழுமையான சுதந்திரம் கொடுப்பமுடன் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் அனைத்து விஷயத்திலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என முயற்சிப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் இவர்களை மாமியாராகவும் சிறந்தவர்களாக மாற்றுகின்றது.இவர்கள் மருமகள் மீதும் எல்லையற்ற அன்பும், அக்கறையும் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் மகனுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் கொடுக்கின்றாறோ, அதே அளவுக்கு மருமகளுக்கும் சுதந்திரம் கொடுக்கும் நியாயமான மற்றும் அன்பான மாமியாராக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |