Siragadikka Aasai: நீ தான் என்னோட போனை திருடுனதா? முத்துவிடம் சிக்கிய வித்யா
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒருவழியாக முத்து தனது போனை எடுத்தது வித்யா என்று கண்டுபிடித்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ரோகினியின் ரகசியத்தை கண்டுபிடிப்பதற்கு முத்து, அடுத்தடுத்து பல பிளான்கள் போட்டுவரும் நிலையில், ரோகினி இதனை தவிடுபொடியாக்கி காய் நகர்த்தி வருகின்றார்.
ரோகினி மலேசியாவில் இருக்கும் தந்தையை இறந்துவிட்டதாக கூறி அந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் முத்துவின் போன் தாத்தா பாட்டி மூலமாக திரும்ப கிடைத்துள்ளது.
இந்நிலையில் தாத்தாவிடம் சென்று வித்யாவின் புகைப்படத்தை காண்பித்து உறுதி செய்துள்ள நிலையில், முத்துவும் வித்யாவிடம் சென்று கேட்டுள்ளார்.
கதையில் முத்துவிற்கு உண்மை தெரிந்த நிலையில், கதையின் சூழ்நிலை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |