ஒற்றை தலைவலி இருக்கா? அப்போ 'இந்த' உணவுளை தவறியும் சாப்பிடாதீங்க!
தற்போது இருக்கும் நவீன மயமாக்கலினால் பலருக்கும் அடிக்கடி தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யாமல் வேலையின் போது வழக்கமான அடிப்படையில் இடைவெளி எடுப்பது முக்கியம் அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அத்துடன் சிலருக்கு ஒற்றை தலைவலி பிரச்சினை முறையற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாகவும் ஏற்படுகின்றது. நாம் தினமும் சாப்பிடும் பொழுது நம்மை அறியாமல் ஒற்றை தலைவலியைத் தூண்டும் சில உணவுகளை எடுத்து கொள்கிறோம்.
இது மூளையின் ரசாயனங்கள் அல்லது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி தலைவலி அதிகப்படுத்தும்.
அப்படியானவர்கள் ஒற்றை தலைவலியை அதிகப்படுத்தும் உணவுகள் என்னென்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது? என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
தலைவலியை தூண்டும் உணவுகள்
1. அளவுக்கு அதிகமாக காஃபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றை தலைவலி ஏற்படும். ஏனெனின் காஃபி மூளையின் ரத்த நாளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2. ஊறுகாய் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் அதிக டைரமைன் உள்ளது. இது ஒற்றை தலைவலி இருந்தால் அவற்றை அதிகப்படுத்தி விடும்.
3. கடைகளில் விற்கப்படும் இனிப்புகளில் Aspartame மற்றும் சுக்ரோலோஸ் உள்ளன. இவை தலைவலி அதிகப்படுத்தும்.
4. மது பிரியர்கள் விரும்பி குடிக்கும் ரெட் ஒயின் மற்றும் பீர் ஆகிய மதுபானங்களில் ஹிஸ்டமைன் மற்றும் டைரமைன் உள்ளன, இவை தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும்.
5. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரைட்ஸ் எனப்படும் இரசாயனம் உள்ளது. இது பதப்படுத்தப்படும் செயன்முறைக்காக பயன்படுத்தப்படுகின்றது. சில சமயங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடை வெளியிடலாம், இது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதாக கருதப்படுகிறது. இதுவும் தலைவலிக்கான காரணியாக பார்க்கப்படுகின்றது.
6. Aged cheese-ஆனது இயற்கையாகவே உருவாகும் சேர்மமான டைரமைன் நிறைந்தது, இதனால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்படலாம்.
7. சாக்லேட்களில் காஃபின் மற்றும் பீட்டா-ஃபீனைல்எதிலமைன் (beta-phenylethylamine) உள்ளன. இவை சென்சிட்டிவான நபர்களுக்கு ஒற்றை தலைவலியை தூண்டும். ஆய்வுகளில் இந்த தகவல் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
8. MSG என்பது குளுட்டமிக் அமிலத்தின் சோடியம் உப்பாகும். இது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சில உணவுகளில் காணப்படுகிறது. இவை நரம்பு செல்களை அதிகமாகத் தூண்டி, ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும்.
9. சிட்ரஸ் பழங்களில் இயற்கையாகவே அமிலங்கள் மற்றும் சேர்மங்கள் உள்ளன. இவை சிலருக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |