இந்த ராசியினர் சீன் போடுவதில் கில்லாடிகளாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழக்கை, நிதி நிலை, விசேட திறமைகள் உட்பட அவர்களின் தனித்துவமான குணங்களிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் சிறிய விடயத்தையும் மற்றவர்கள் முன்னிலையில், பெரிதாக காட்டி கவனம் ஈர்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

அப்படி கவலையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வெற்றியாக இருந்தாலும் சரி அதனை விளம்பரப்படுத்தி மிகைப்படுத்த நினைக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் இரக்க குணத்துக்கும் அதிக உணர்திறன் கொண்ட தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் தனிப்பட்ட கவலைகளை எப்போதும் மற்றவர்களிடம் சொல்லி சொல்லியே அதை மிகைப்படுத்தி கவலைப்படும் இயல்புடையவர்களாக இருப்பார்கள்.
எதுவுமே இல்லாத போது பல வருடங்களுக்கு முன்னர் நடந்த விடயங்களை பேசியாவது எனக்கு யாரும் இல்லை என புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
மேஷம்

இந்த ராசியினர் ஒரு விடயத்தை அடைய வேண்டும் என முடிவு செய்துவிட்டால், சத்தம் போட்டு, கதறி அழுதேனும் மற்றவர்களின் மனநிலையை குழப்பி காரியம் சாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் நினைத்ததை சாதிக்கும் வரையில் மற்றவர்களின் கவனம் இவர்கள் மீது இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வார்கள்.
சிறிய பிரச்சினைக்கும் மாஸ் ஹீரோவை போல் சண்டையில் இறங்கும் குணம் இந்த ராசியினருக்கு இயல்பாகவே இருக்கும்.
சிம்மம்

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் எப்போதும் தாங்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏதாவது ஒரு விடயத்தை செய்து கொண்டே தான் இருப்பார்கள். இந்த ராசியினர் கூட்டத்தில் இருந்தாலும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |