எப்போதும் ஆடம்பரத்தையே விரும்பும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?
பொதுவாக, ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவரது வாழ்க்கைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
எதிர்கால முன்னேற்றம், பொருளாதார நிலை, தொழில் வளர்ச்சி, காதல், திருமண வாழ்க்கை, உடல்நலம், தனித்திறமைகள் மட்டுமின்றி, அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணாதிசயங்களிலும் பிறந்த ராசியின் ஆதிக்கம் பெருமளவில் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாகலும், வாழ்க்கை முழுவதும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதில் உறுதியான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி வாழ்வில் ஒருபோதும் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர் இயல்பாகவே எண்ணிக்கையை விட தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் தெரிவுகள் எப்போதும் சிறந்ததாகவும், தரமானதாகவும் மற்றும் வித்தியாசமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
வாழ்க்கை ஒரு முறை தான் அதனை முழுமையாக அனுபவித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் எதிலும் ஆடம்பரத்தை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி

இந்த ராசியினர் இயல்பில் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். ஆனால் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் எப்போதும் சிறந்ததை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் செலவு செய்யும் போது கவனமாக செய்வது போல் தோன்றினபாலும், தங்களுக்கு பிடித்ததை வாங்கும் போது விலையை பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாற்றார்கள்.
வாழ்க்கை முழுவதும் நன்றாக சாப்பிட்டு தரமான உடைகளை அணிந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் மற்றவ்களை விட அதிகமாக உழைக்கும் ராசியாக அறியப்படுகின்றார்கள்.ஆனால் இவர்கள் ஓடி ஓடி உழைப்தே ஆடம்பரமாகவும், கெத்தாகவும் வாழ வேண்டும் என்பதற்காக தான்.
இவர்கள் செலவு செய்யும் விதமே சற்று தனித்துவதானதாக இருக்கும். யாரிடடும் இல்லாத பொருள்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இயல்பாகவே ஈடம்பர பொருட்கள் மீதும் சொகுசு வாழை்க்கை மீதும் ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த விடயத்திலும் ஒரு வித்தியாசத்தையும், தனித்துவத்தையும் விரும்புவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |