இந்த ராசிக்காரங்க வெள்ளி அணிதால் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகுமாம்... நீங்க என்ன ராசி?
பொதுவாக விலையுடன் ஒப்பிடும் போது தங்கம் மதிப்பு வாய்ந்ததாக இருந்தாலும் அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் சக்தி தக்கத்தை விட வெள்ளிக்கே அதிகமாக இருக்கின்றது.
ஜோதிட சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் பணம் உட்பட அனைத்து ஐஸ்வர்யங்களையும் வெள்ளியை அணிந்துக்கொண்டால் பெற முடியுமாம்.

அறிவியலின் அடிப்படையில் வெள்ளியில் ஆபரணங்களை அணிந்து கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வெள்ளி ஆபரணங்களை அணிந்துக்கொள்வன் மூலம் அவர்களுக்கு சாதாரணமாக கிடைக்கும் சாதக பலன்கள் அதிகரிக்கும்.

அப்படி வெள்ளியை அணிந்துக்கொள்வதால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எனவே இவர்களுக்கு வெள்ளி அதிர்ஷ்டமான உலோகமாக இருக்கும்.

இவர்கள் வெள்ளி மோதிரம் அல்லது லாக்கெட்டை வெள்ளிக்கிழமையில் அணிவந்துக்கொள்வதால் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சியை அடைவார்கள். இவர்களின் அதிர்ஷ்டம் பெருகும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கும் வெள்ளி உலோகம் அணிவது அவர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கின்றது.

அவர்கள் திங்கட்கிழமை நாட்களில் வெள்ளியில் ஆபரணங்களை அணிவது அவர்களுக்கு பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு வெள்ளி மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய உலோகமாக பார்க்கப்படுகின்றது.

அவர்கள் வாரம் முழுவதும் செம்பு அல்லது வெள்ளியை அணிவது அவர்களின் அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்கும். தொழில் விடயங்களில் நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |