ஆண்களையே வியக்கவைக்கும் பேராண்மை கொண்ட டாப் 3 ஆண் ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்ப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்களின் இயல்பாகவே மற்றவர்களை எளிதில் கவரும் வசீகர தோற்றமும், காந்த பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் கூட வியக்க வைக்கும் பேராண்மையும் வசீகரமும் கொண்ட டாப் 3 ஆண் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் அழகு, காதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்களிடம் இயல்பாகவே ஒரு கவர்ச்சியும்,ஈர்ப்புத்தன்மையும் காணப்படும்.
இவர்கள் சாதாரணமாக உடையணிந்து சென்றால் கூட மற்றவர்களை திரும்பி பார்க்கவைக்கும் ஒரு வித வசீகர தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் விலையுயர்ந்த உடைகளை அணிந்தால் கூட இல்லாத ஒரு அழகும் கவர்ச்சியும், இவர்கள் எந்த உடையை அணிந்தாலும் கிடைக்கும். காதலின் கிரகத்தால் ஆளப்படுவதால் இந்த ராசி ஆண்கள் பெண்களை நொடியில் மயக்கிவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிதுனம்

இரட்டை இயல்புக்கு பெயர் பெற்ற மிதுன ராசி ஆண்கள் பிறப்பிலேயே மற்றவர்களை கவரும் அழகிய முக அமைப்பையும், வசீகர தோற்றத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் பெரியளவில் மற்றவர்களுடன் நெருங்கி பழக விரும்ப மாட்டார்கள்.ஆனாலும் இவர்களின் தோற்றமும் நேர்த்தியும் அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கம்.
தனிப்பட்ட விடயங்களில் ரகசியம் காக்கும் குணம் கொண்ட இவர்கள் முடிவெடுக்கும் வி்டயத்தில் தடுமாற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் கண்களில் எப்போதும் ஒரு வித காந்த ஆற்றல் இருக்கும்.
கடகம்

கடக ராசியினரும் அழகு, ஆடம்பரத்துக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படுவதால், இந்த ராசி ஆண்கள் காதல் விடயத்திலும் தங்களின் வெளித்தோற்றத்தால் பெண்களை கவருவதிலும் படு கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்களின் மனம் அன்பு மற்றும் இரக்க குணத்தால் நிரம்பியிருப்பதால், இவர்களின் தோற்றம் எப்போதுமே இரட்ப்பு கவர்ச்சியுடன் இருக்கும். இவர்கள் புன்னகையில் எப்போதும் ஒரு பிரகாசம் இருக்கும்.
இந்த ராசி ஆண்கள் நன்றாக உடையணிந்து வெளியில் சென்றால், பெண்கள் மாத்திமன்றி ஆண்களுமே ஒரு கணம் வியந்து பார்க்கும் வகையில், இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |