எளிமையாக காதல் வலையில் சிக்கிக்கொள்ளும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள் என்பவற்றுக்கும் இடையில் மிக நெறுங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அன்புக்காக ஏங்குபவர்களாகவும், இலகுவாக காதல் வயப்படக்கூடிய இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் யார் அன்பாக பேசினாலும் அவர்களுடன் விரைவில் நட்பாக பழக ஆரம்பித்துவிடும் குணம் இவர்களுக்கு இருக்கும்.
இவர்களுக்கு காதல் விடயங்களில் சற்று ஆர்வம் மற்றும் ஆசை அதிகமாக இருக்கும்.இவர்களிடம் காதலை அன்பான முறையில் வெளிப்படுத்தினால், எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் உடனே சம்மதம் தெரிவித்து விடுவார்கள்.
இவர்கள் அன்புக்காக ஏங்குபவர்களாகவும், அன்பு செலுத்தினால், எதையும் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் கருத்துக்களுக்கும், சதந்திரமான வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
எளிதில் உணச்சிவசப்படும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். உணர்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் இவர்கள் மனதை தொடும் வகையில் காதலை வெளிப்படுத்தினால் உடனே இவர்களிடம் மயங்கி காதலில் விழுந்துவிடுவார்கள்.
இவர்கள் தங்களின் துணையின் ஆசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். துணையின் மனதை புரிந்து நடப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் பாசத்துக்கு மட்டுமே கட்டுப்படும் குணம் கொண்டவர்கள்.
துலாம்
இந்த ராசி பெண்கள் காதல் விடயத்தில் மிகவும் நேர்மையானவர்களாகவும், விசுவாசம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சுய மரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களிடம் மரியாதையான முறையில் காதலை வெளிப்படுத்தினால் அவர்களின்பால் வெகுவாக இந்த ராசி பெண்கள் ஈர்க்கப்படுவார்கள்.
இந்தப் பெண்கள் தங்களைப் பாசத்தோடும், மரியாதையோடும் நடத்தும் நபரிடம் விரைவில் காதலில் விடுழுந்துவிடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |