மிகவும் கண்டிப்பான பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியினரும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளனர்.
அந்த வகையில் மிகவும் கண்டிப்பாகவும் அதே நேரம் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ளும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் உயர்ந்த இலக்குகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இயல்பாகவே மிகவும் கண்டிப்பானவர்கள் என்பதால் தங்களை சுற்றியுள்ளவர்களையும் உயர்த்தும் நோக்கில் செயற்படுவார்கள். இவர்கள் எப்போதும் ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் எல்லா விடயங்களையும் முழுமையாகவும் சரியாகவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இதனையே மற்றவர்களிடமும் எதிர்பார்பதால் மிகவும் கண்டிப்பாக நடந்துக்கொள்வார்கள். இயல்பாகவே அதிக புத்திக்கூர்மை கொண்ட இவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்ப மாட்டார்கள். சுதந்திரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட இவர்கள் கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள். எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றார்களோ அதே போல் மிகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |