குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா?
பொதுவோகவே எல்லா பொற்றோர்களுக்கும் தங்களின் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
சமூகத்திற்கு ஒரு நல்ல பிரஜையை வழங்குவதும் தீயவர்களை வழங்குவதும் நிச்சயம் பெற்றோர்கள் கையில் தான் இருக்கின்றது. எனவே குழந்தைகளுக்கு சிறு வயதில் இருதே நல்லது கெட்டதை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.
ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி இருவரையும் சமமாக நடத்த வேண்டியது மிகவும் முக்கியமானது.
சமூகத்தில் இன்று நடைபெறும் பல்வேறு வன்கொடுமைகளுக்கும் முக்கிய காரணம் பெண் குழந்தைகளுக்கு வழங்கிய பல அறிவுரைகளை ஆண்குழந்தைகளுக்கு வழங்க மறந்தது (மறுத்தது) தான்.
அந்தவகையில் குழந்தைகளுக்கு 10 வயதிற்குள்ளேயே கட்டாயமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய முக்கிய 10 விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய பழக்கங்கள்
குழந்தைகளுக்கு 10 வயதுக்குள் கட்டாயம் அடிப்படை சமையல் விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். அது அவர்களை தனிமையிலும் பாதுகாப்பாக இருக்க செய்யும் ஒரு முக்கிய விடயமாகும். யாரின் உதவியும் இன்றி தன்கை தானே பார்த்துக்கொள்ள இது முதல் படியாக இருக்கின்றது.
குழந்தைகள் விளையாடும் போது காயங்கள் ஏற்படுவதும் அடிப்படுவதும் இயல்புதான் இதற்காக மனம் தளராமல் தனது காயங்களுக்கு தங்களே முதலுதவி செய்வதற்கு நிச்சயம் கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு பயத்தை போக்க பெரிதும் துணைப்புரியும்.
ஷாப்பிங் செய்வது என்றால் யாருக்கு தான் பிடிக்காது ஆனால், பட்ஜெட் ஷாப்பிங் செய்வது பற்றி இன்னும் பெரியவர்களுக்கே சரியாக தெரிவதில்லை. ஆனால் குழந்தைகளுக்கு 10 வயது ஆகும் போதே தங்களுக்கு தேவையான பொருட்களை தங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றாற் போல் தெரிவு செய்து வாங்குவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
இயற்கையை பாதுகாப்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரினதும் கடமை என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில், மரம் நடுதல், செடி வளர்த்தல் போன்ற பழக்கங்களை 10 வயதுக்குள்ளேயே கற்றுக்கொடுத்துவிட வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும் கூட பயன்படும் என்ற விடயத்தை புரிய வைக்க வேண்டும்.
தற்காலத்தில் எல்லாமே தொழில்நுட்ப மயமாகிவிட்டது. கைபேசி இல்லாடமல் யாராலும் ஒரு நாளை கூட கடத்த முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, உங்கள் குழந்தை பாதுகாப்பாக எப்படி மொபைலை உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுக்க வேண்டியது அசியம்.
குழந்தைகளுக்கு அதிகமாக எழுதும் பழக்கத்தை 10 வயதுக்குள்ளேயே ஏற்படுத்திவிட வேண்டும். இது அவர்களின் ஆளுமையையும் உள்ளார்ந்த திறமைகளையும் கண்டுப்பிடிக்க சிறந்த வழியாகவும் இருக்கும்.
சமையல் போன்று துணி துவைப்பதும், அத்தியாவசியமாக கற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும். எனவே, அதையும் உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள் அத்துடன் அதை எவ்வாறு அழகாகவும் நேர்த்தியாகவும் மடித்து அடுக்கி வைக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதுமட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிசுகளை கொடுப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கின்றது என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
புரிந்துணர்வு தன்மை இருந்தால் மட்டுமே, ஒருவரால் இன்னொருவருக்கு எந்த துன்பம் ஏற்படுகின்றது. எனவே சிறுவயதிலேயே குழந்தைகளை புரிந்துணர்வு தன்மையுடன் வளர்க்க வேண்டியது அவசியம். முக்கியமாக மற்றவர்ளின் உணர்வுகளுக்கு மதிப்ப. கொடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.இளம் மூங்கிலை வளைப்பது சுலபம். அது முதிர்ந்துவிட்டால் வளையாது. சிறு வயதில் ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதும் கற்றுக்கொள்வதும் சுலபம்.எனவே குழந்தைகளுக்கு நல்ல விடயங்களை 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டியது இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |