தவறியும் இந்த உருவங்களை Tattoo போடாதீங்க: தீய சக்திகளை ஈர்க்குமாம்!
பச்சைக்குத்தும் பழக்கம் என்பது நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும்.
ஊசியின் மூலம் உடல் முழுவதும் பச்சைக் குத்தும் போது நரம்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காகவே இந்த முறையை மேற்கொண்டு வந்தனர்.
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு Tattoosபோடுவதில் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. நடிகைகள் தொடங்கி சாதாரண மக்கள் வரையில் Tattoos மீதான மோகம் காணப்படுகின்றது என்றால் மிகையாகாது.
சிலர் தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துக் கொள்வது அல்லது குழந்தைப் பெற்றுக்கொள்வது போன்ற மிக முக்கியமான சுப நிகழ்வுகளை நினைவுக்கூறும் வகையிலும் Tattoo போட்டுக்கொள்கின்றார்கள்.
ஆனால் சாஸ்திஜரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சின்னங்களை பச்சைக்குத்துவது துரதிஷ்டத்தை கொடுக்கும் என்றும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது.
அதன் பிரகாரம் Tattoos போடும் போது தவிர்க்க வேண்டிய சின்னங்கள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய சின்னங்கள்
சாஸ்திரங்களின் அடிப்படையில் மதச் சின்னங்கள் மிகவும் புனிதமானவையாக பார்க்கப்படுகின்றது. அதனை கால், பாதம், போன்ற பானங்களில் பச்சைக்குத்திக்கொள்வது அதனை அவமதிப்பதாக பார்க்கப்படுவதுடன் இது உங்களின் வாழ்வில் இறைவனின் ஆசிர்வாதத்தை இல்லாமல் ஆக்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு மத சின்னங்களை Tattoo போடுவது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளையும் துரதிஷ்டத்தையும் கொடுக்கும்.
மண்டை ஓடு அல்லது இறப்பு சின்னங்களை உடலில் Tattoo போடுவதால் எதிர்மறை ஆற்றல்கள் நம்மை சூழ்ந்துக்கொள்வதற்கும், துஷ்ட சக்திகள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.
எதிர்மறை சொற்றொடர்கள் மற்றும் வார்த்தைகள் ஆகியவற்யை Tattoo போட்டுக்கொள்வதும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து வாழ்வில் அதிக பிரச்சினைகளையும் கொண்டுவரும்.
தீய அல்லது பேய் சின்னங்கள் மற்றும் விலங்குகளின் உருவங்களை பச்சை குத்வதும் வாழ்கையில் பல்வேறு துன்பங்களையும் துரதிஷ்டத்தையும் ஈர்கும் என்று நம்பப்படுகின்றது. எனவே Tattoo போடும் போது இவற்றை தவிர்ப்பது சிறந்தது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |