பாம்புகளை கூட விட்டுவைக்காது.. உலகின் மிக கொடிய பாம்புகள் பற்றி தெரியுமா?
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்பு கடியால் உயிரிழக்கிறார்கள். அத்துடன் பாம்பு கடியால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கையும் அதிகம்.
ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். இந்த பாம்புகள் மழைக்காலத்தில் தான் பல மடங்கு அதிகரிக்கிறது.
மழைக்காலங்களில் பாதுகாப்பான இடங்களைத் தேடி பாம்புகள் வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறது. அப்போது தன்னை பாதுகாத்து கொள்வதற்காக மனிதர்களை தாக்குகின்றன.
சில நேரங்களில் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டும் வீடுகளுக்குள் செல்லவும் வாய்ப்பு உள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக வனவிலங்குகள் பற்றி நிபுணர் ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் சுமார் 364 வகையான பாம்புகள் வாழ்கின்றன” எனக் கூறியுள்ளார்.
பாம்புகள் பூச்சிகள், தவளை மற்றும் மாமிசங்களை விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். ஆனால் குறிப்பிட்ட சில வகையான பாம்புகள் மற்ற பாம்புகளையே உணவாக உட்க் கொள்ளும். அப்படியான பாம்புகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மற்ற பாம்புகளையே உண்ணும் பாம்புகள்
ஆப்பிரிக்க ராக் (African Rock Python) | மலைப்பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்ணும். |
ஈஸ்டர்ன் இண்டிகோ பாம்பு (Eastern Indigo Snakes) | ஈஸ்டர்ன் இண்டிகோ பாம்புகள் வட அமெரிக்காவில் வாழ்கின்றன. இந்த பாம்புகளிடம் பெரியளவில் விஷம் இருக்காது. ஆனால் பெரிய பாம்பு ராட்டில்ஸ்னேக்குகள் மற்றும் செம்புத் தலைகள் போன்ற விஷமுள்ள பாம்புகளை வேட்டையாடி உணவாக உட்க் கொள்ளும். |
நீல மலாயன் (Blue Malayan Coral Snake) | நீல மலாயன் பவளப்பாம்புகள் சிறிய இனங்களை சார்ந்த பாம்புகளை வேட்டையாடி சாப்பிடும். |
ராஜ நாகம் (king cobra) | ராஜ நாகம் தன்னுடைய இனமான ராஜ நாகங்கள் உட்பட மற்ற பாம்புகளான சாரை, விரியன், நீர்க்கோலி போன்ற பாம்புகளையும் வேட்டையாடி சாப்பிடும். |
மஞ்சள் எலிப் பாம்பு (Yellow Rat Snake) | மஞ்சள் எலிப் பாம்புகள் தென்கிழக்கு அமெரிக்காவில் அதிகமாக வாழ்கின்றன. இவை பெரும்பாலும் விஷமுள்ள பாம்புகளை வேட்டையாடி உணவாக உட்க் கொள்ளும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |