நிறம் குறைவான பெண்கள் எப்படி lipstick தெரிவு செய்யனும்னு தெரியுமா? இந்த தவறை செய்யாதீங்க
பொதுவாகவே பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு காணப்படுகின்றது.
மேலும் பெண்களில் அதிகமானோர் தங்கள் உதடுகளின் அழகை மேம்படுத்த லிப்ஸ் டிக் பூசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
மேக்கப் பொருட்களிலும் கூட அதிகம் விற்பனையாவது இந்த லிப்ஸ் டிக் தான் என ஒரு ஆய்வு தகவல் குறிப்பிடுகின்றது. அப்படி எல்லா பெண்களுக்குமே மிகவும் பிடித்தமான ஒரு ஒப்பனை பொருளாக லிப்ஸ் டிக் காணப்படுகின்றது.
எந்த ஒப்பனையும் முழுமை பெற வேண்டும் என்றால் லிப்ஸ் போட்டால் தான் நிறைவமைகின்றது. லிப்ஸ்டிக் இல்லாத மேக்-அப் சாத்தியமற்றது என்றால் மிகையாகாது. ஆனால் உடல் நிறத்துக்கு ஏற்றால் போல் லிப்ஸ்டிக் தெரிவு செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாதது.
காரணம் தவறான லிப்ஸ்டிக் ஷேட் பயன்படுத்துவது உங்களுடைய அழகை முற்றிலுமாக வீணாக்க வாய்ப்புள்ளது. அதனால் பெண்கள் லிப்ஸ்டிக்கை தெரிவு செய்யும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் தங்களின் சரும தொனிக்கு ஏற்ற சரியான விப்ஸ் டிக் ஷேடை எப்படி தெரிவு செய்ய வேண்டும்.சற்று நிறம் குறைவாக பெண்கள் எந்த நிறத்தில் லிப்ஸ் டிக் பாவிப்பது அவர்களின் அழகை இரட்டிப்பாக்கும் என்பது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிறம் குறைவாக பெண்களுக்கு ஏற்ற ஷேடு எது?
சிவப்பு : சிவப்பு நிற லிப்ஸ்டிக் பொதுவாகவே எல்லா வகையான சரும நிறத்துக்குமட சிறப்பாக பொருந்தக்கூடியதாக இருக்கும்.
இந்த நிறம் நல்ல சிவப்பழகு சருமம் கொண்ட பெண்களுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தும்.
அது போல் அடர் சருமம் கொண்ட பெண்களின் முக அழகை சிவப்பு நிறலிப்ஸ்டிக் சற்று மங்களாக காட்டுவதுடன் அவர்களின் உதடுகளை மிகவும் கவர்ச்சியாக காட்டும்.
உதட்டின் அழகை தனியாக எடுத்துக்காட்ட வேண்டும் என நினைக்கும் அடர்நிற சருமம் கொண்ட பெண்கள் நிச்சயம் சிவப்பு நிற லிப்ஸ் டிக்கை தெரிவு செய்யலாம்.
நியூடு : அடர் நிற சருமம் கொண்ட பெண்கள் தங்களின் முகத்துக்கு நியூடு நிற லிப்ஸ்டிக் பொருந்தாது என நினைத்து இதனை பயன்டுத்துவது கிடையாது.
ஆனால் உண்மையில் நியூடு ஷேடு லிப்ஸ்டிக் அனைத்து வகையான சரும தொனிகளுக்கும் பொருந்தக்கூடியது தான்.
சற்று நிறம் குறைவான பெண்கள் நியூட் கலர் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது முதலில் சிறிதளவு ஃபவுண்டேஷன் எடுத்து அதனை உங்கள் உதடுகளில் தடவி அதன் மீது லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
பிரவுன் : பிரவுன் லிப்ஸ் டிக் டஸ்கி ஸ்கின் டோனுக்கு அற்புதமாக பொருந்தக்கூடியது. லிப்ஸ்டிக் போட்டாலும் இயற்கை உதடுகள் போல் காட்சியளிக்க வேண்டும் என நினைப்பவர்ளுக்கு பிரவுன் நிற லிப்ஸ்டிக் மிகவும் சிறப்பான தெரிவாக இருக்கும்.
அடர் நிற சருமம் கொண்ட பெண்கள் காபி பிரவுன், நியூட் பிரவுன், ப்ளம் பிரவுன் ஷேடுகளை தாராளமாக பயன்படுத்தலாம்.
பிங்க் : பிங்க் நிற லிப்ஸ்டிக் சிவப்பழகு சருமம் கொண்டவரை்களுக்கு தான் அழகாக இருக்கும் என அடர்நிற சருமம் கொண்ட பெண்கள் நினைத்துக்கொண்டு அதனை பயன்படுத்தி பார்க்காமலேயே தவிர்த்து விடுவது வழக்கம்.
ஆனால் ரோஸ் பிங்க், மெஜந்தா, ஃப்யூஷியா போன்ற நிறங்கள் டஸ்கி ஸ்கின் டோனுக்கு மிகவும் அழகாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |