பிரபல சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் என்ன? அதிகமாக வாங்குபவர் இவர்தான்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மக்களை அதிகமாக கவர்ந்து வரும் நிலையில், இதில் நடிக்கும் சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை மதுமிதா
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மதுமிதா நாள் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் பெறுகின்றார். மேலும் இவரது நடிப்பு மக்களை அதிகமாக கவர்ந்தும் வருகின்றது.
சுந்தரி சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கேப்ரில்லா செல்லஸ் டிக் டாக் மூலம் பிரபலமாகி சின்ன திரையில் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் நாள் ஒன்றிற்கு ரூ. 35 ஆயிரம் சம்பளம் பெறுகின்றார்.
கயல் சீரியலில் கயலாக நடித்து வரும் சைத்தா ரெட்டி வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் ஒரு நாளைக்கு ரூ.22 ஆயிரம் சம்பளமாக பெறுகின்றார்.
ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆல்யா மானசா இனியா சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறுகின்றார்.
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கதாபாத்தில் கிராமத்து குயிலாக களக்கும் நடிகை மனீஷா மகேஷ் நாள் ஒன்றிற்கு ரூ.17 ஆயிரம் சம்பளமாக பெறுகின்றாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |